சிங்கப்பூரில் பணிபுரிந்த 42 வயதுமிக்க ஊழியர் ஜொகூர் பாருவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம், நேற்று நவ.22 நள்ளிரவு 1.55 மணிக்கு Jalan Pantai பகுதியில் நடந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் குறிப்பிட்டுள்ளது.
மூன்று கார்கள் மோதிய இந்த விபத்தில் ஊழியர் தலையில் காயங்கள் ஏற்பட்டதாகவும் இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் வெளியான காணொளியில் பெரும் கூட்டம் ஒன்று அங்கு கூடியிருப்பதையும், பெண் ஒருவர் (ஊழியரின் மனைவி) நின்று அழுதுகொண்டு இருந்ததையும் காண முடிந்தது.
அவரின் மனைவிக்கு இருவர் ஆறுதல் கூறுவதையும் அந்த காணொளியில் காண முடிந்தது.
விபத்தை அடுத்து, ஊழியரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக, சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
காவல்துறை விசாரணைகள் தொடர்கின்றன.
வெளிநாட்டு ஊழியர்களுக்காக தனித்துவமாக உருவாக்கப்பட்ட Singai Tamil வாட்ஸ்ஆப் சேனலில் இணைந்திருங்கள்!
துவாஸ் போர்ட் கடலில் விழுந்த இரு ஊழியர்கள் மரணம்
வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய பேருந்து ஓட்டுநர் விபத்தில் சிக்கி மரணம்
கத்தோங்கில் மரம் வெட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த 38 வயது ஊழியர் மரணம்
PHOTOS: Shin Min Daily News