சிங்கப்பூரின் துவாஸ் போர்ட்டில் பணியிலிருந்த இரு ஊழியர்கள் கடலில் விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்ததாகவும், இன்னொருவர் மருத்துவமனையில் இறந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
நேற்று (செப்.22) காலை சுமார் 8.40 மணியளவில் நடந்த சம்பவத்தில் 44 வயது ஊழியர் சம்பவ இடத்திலும், 33 வயது ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மரணித்ததாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது.
காவல்துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சதிச்செயல் நடந்தது குறித்த எந்த சந்தேகமும் இல்லை என கூறியுள்ளது.
பணியில் இருந்த ஊழியர்கள்
கப்பலில் சரக்குகளை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த இரு ஊழியர்களும் கடலில் விழுந்ததாக PSA Singapore செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதில் 44 வயது ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை (SCDF) கூறியுள்ளது.
மேலும் 33 வயது ஊழியர் சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இந்நிலையில், இது தொடர்பாக PSA Singapore நிறுவனம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைப்பில் இருப்பதாகவும் தேவையான விசாரணைகளுக்கு உதவி வருவதாகவும் கூறியுள்ளது.
மேலும் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளையும் வழங்கி வருவதாகவும் அது கூறியுள்ளது.
காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
மேலதிக விவரங்களுக்கு எங்களின் whatsapp பக்கத்தில் இணைப்பில் இருங்கள்…
தென்காசியை சேர்ந்த ஊழியர் சிங்கப்பூரில் கொலை.. “மகனின் கொலைக்கு நீதி வேண்டும்” – கண்ணீரில் குடும்பம்