லாரி மோதிய சம்பவத்தில் மோட்டர் சைக்கிள் ஓட்டி மரணம் – லாரி ஓட்டுநர் கைது

Published: 22 Oct 2026, 4:33 PM |
West Coast Ferry Road accident one dies

வெஸ்ட் கோஸ்ட் பார்க் அருகே லாரி மோதிய விபத்தில் 30 வயதுமிக்க மோட்டர் சைக்கிள் ஓட்டி ஒருவர் மரணித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இதில், லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.20) காலை நடந்தது.

மலேசியா பதிவு எண் கொண்ட மோட்டர் சைக்கிள் விபத்தில் சிக்கி சாலையில் சேதமடைந்து கிடப்பதை ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட புகைப்படத்தில் காண முடிகிறது.

அதே வேளையில், போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் சாலை சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதையும் காண முடிகிறது.

வெஸ்ட் கோஸ்ட் ஃபெர்ரி ரோடு (West Coast Ferry Road) மற்றும் ஹார்பர் டிரைவ் (Harbour Drive) சந்திப்பில் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

காலை சுமார் 7.30 மணிக்கு காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மோட்டர் சைக்கிள் ஓட்டி மயக்க நிலையில் இருந்துள்ளார், பின்னர் அவர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கைது

கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி மரணம் ஏற்படுத்தியதாக சொல்லப்படும் 24 வயதுமிக்க லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் “கேஜ்” லாரிகளுக்கு 2027 முதல் தடை – மற்ற லாரிகளுக்கும் தடை பொருந்துமா?

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் சென்ற லாரிகள் மோதல்.. ஊழியர்களுக்கு காயம்

சிங்னலை மீறிய லாரி.. டாக்ஸி ஓட்டுநர் நிரந்தர ஊனம் – லாரி ஓட்டுநருக்கு 23 மாத சிறை, தடை

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.