About Us
நமது Singai Tamil என்பது சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள், இந்திய வம்சாவளியினர் மற்றும் இங்கு வேலை செய்து வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட தமிழ் செய்தித் தளமாகும்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகள், அரசாங்கத்தின் புதிய அறிவிப்புகள், சட்ட விதி மாற்றங்கள், வெளிநாட்டு ஊழியர்களுக்கான அறிவிப்புகள், வேலைவாய்ப்புகள் மற்றும் சம்பளம் தொடர்பான தகவல்கள், மேலும் சமூக நிகழ்வுகள், கல்வி, வாழ்க்கை முறை மற்றும் பொதுப் பயன்பாட்டு தகவல்களை விரைவாகவும், துல்லியமாகவும், எளிமையான தமிழில் உங்களுக்கு புரியும்படி வழங்குவதே எங்களின் உயரிய நோக்கம்.
நாங்கள் ஆங்கில செய்திகளை வெறும் மொழிபெயர்த்து வெளியிடும் இணையதளம் அல்ல. மாறாக சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான தகவல்களை ஆராய்ந்து, உண்மைத் தகவல்களின் அடிப்படையில், பொறுப்புடன் தகவல்களை வழங்கும் செய்தித் தளமாக செயல்படுகிறோம்.
எங்கள் நோக்கம்
- சிங்கப்பூர் தொடர்பான நம்பகமான தமிழ் செய்திகளை வழங்குவது.
- முக்கிய அறிவிப்புகளை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது.
- உண்மை, துல்லியம் மற்றும் பொறுப்புணர்வை முன்னிலைப்படுத்துவது.
- உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை சிங்கப்பூரின் நிகழ்வுகளுடன் இணைப்பது.
எங்கள் உறுதி
ஒவ்வொரு செய்தி மற்றும் தகவல்களை வெளியிடும் முன் அதன் துல்லியத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கிறோம். வேகத்தை விட நம்பகத்தன்மைக்கும், வதந்திகளை விட உண்மைத் தகவல்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறோம்.
Singai Tamil என்பது உண்மையையும் நம்பிக்கையையும் உங்களிடம் கொண்டு சேர்க்கும் உங்களின் செய்தித் துணை.
Accountability
Singai Tamil தளத்தில் வெளியாகும் செய்திகள் ஒவ்வொரு செய்தியிலும் துல்லியத்திற்கு முன்னுரிமை அளிக்கிறோம். அதில் ஏதேனும் சிறு பிழைகள் ஏற்பட்டால், அவற்றை விரைவாகவும் வெளிப்படை தன்மையுடனும் திருத்தி, அதற்கான குறிப்பையும் கட்டுரையில் சேர்ப்போம். செய்தி, திருத்தம் அல்லது உங்கள் கருத்துகளை பகிர: editorial@singaitamil.com