யுஷுன் கட்டிடத்தில் இருந்து விழுந்து 26 வயது பெண் மரணம்.. பணிப்பெண்ணா? நெட்டிசன்கள் கருத்து

Published: 21 Oct 2026, 2:01 PM |
Yishun women fall

சிங்கப்பூர் யுஷுன் அடுக்குமாடி கார் நிறுத்துமிடத்தில் இருந்து கடந்த அக்டோபர் 15 அன்று கீழே விழுந்த 26 வயதுமிக்க பெண்மணி ஒருவர் மரணித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

இறந்தவர் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் என்றும் வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.

இது தொடர்பான காணொளி Facebook சமூக ஊடகத்தின் வழியே தீயாக பரவியது. அதில் கட்டட விளிம்பில் பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்ததை காண முடிந்தது.

அங்கிருந்த SCDF மீட்பு குழுவினர் அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்துவது போல தெரிகிறது. அதே நேரத்தில், கீழே காற்று நிரம்பிய பாதுகாப்பு பை தயார் நிலையில் இருந்தது.

ஆனால் அந்த பெண், பாதுகாப்பு பையை மீறி வெளியே விழுந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவர் மீட்கப்பட்டு கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார்.

இதில் சதிச்செயல் குறித்த சந்தேகம் ஏதும் இல்லை என்று காவல்துறை கூறியுள்ளது.

விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

அந்த பணிப்பெண் முதலாளி வீட்டில் இருந்து ஓடி வந்தவர் என்று Facebook வாயிலாக பல கருத்துக்கள் பரவுகின்றன, ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

மனநல ஆதரவு தேவைப்படுவோருக்கான தொடர்பு எண்கள்:

வெளிநாட்டு பணிபெண்களுக்கான சமூக ஆதரவு மற்றும் பயிற்சி அமைப்பு தொடர்பு எண்: 1800 339 4357 (24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம்)

வெளிநாட்டு ஊழியர்களுக்கான HOME அமைப்பு தொடர்பு எண்: +65 6341 5535  (WhatsApp / Viber / SMS)

வெளிநாட்டு பணிப்பெண்களுக்கான HOME அமைப்பு தொடர்பு எண்: +65 9787 3122 (WhatsApp / SMS / Call)

வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான செய்திகளை துல்லியமாக அறிந்துகொள்ள “சிங்கப்பூர் செய்திகள்” உடன் இணைப்பில் இருங்கள்..

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.