சிங்னலை மீறிய லாரி.. டாக்ஸி ஓட்டுநர் நிரந்தர ஊனம் – லாரி ஓட்டுநருக்கு 23 மாத சிறை, தடை

Published: 12 Sep 2026, 2:23 PM |

சிங்கப்பூரில் விபத்தை ஏற்படுத்தி டாக்ஸி ஓட்டுநரை நிரந்தர ஊனமடையச் செய்த சம்பவத்தில் லாரி ஓட்டுநருக்கு 23 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 2023 மே 2 அன்று நிக்கோல் அவென்யூவில் இருந்து எஸ்பிளனேட் டிரைவை நோக்கி இர்வான் பின் முகமது இப்ராஹிம் அந்த லாரியை ஓட்டிச் சென்றார்.

சுமார் 50 வினாடிகளாகச் சிவப்பு நிறத்தில் எரிந்து கொண்டிருந்த போக்குவரத்து சிங்னலை மீறி இர்வான் லாரியை ஒட்டிச் சென்றுள்ளார்.

அப்போது லாரி அவ்வழியாக சென்ற டாக்ஸியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

நிரந்தர ஊனமுற்ற நிலை

விபத்தில் சிக்கிய 56 வயதுமிக்க டாக்ஸி ஓட்டுநர் லிம் பூன் ஹூ, சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு மூளை ரத்த கசிவு, எலும்பு முறிவுகள் உட்பட 11 வகையான காயங்கள் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

இதனால் அவர் நிரந்தர ஊனமுற்ற நிலைக்கு செல்லப்பட்டார். அன்றாட வாழ்க்கைக்கு கூட அவர் பிறரை சார்ந்திருக்க கூடிய நிலை ஏற்பட்டது.

இறுதியாக, 2025 ஜூன் 14ஆம் தேதி அன்று டாக்ஸி ஓட்டுநர் லிம்மின் உயிர் பிரிந்தது.

இருப்பினும், விபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயங்களால் நேரடியாக இந்த மரணம் ஏற்பட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

லாரி ஓட்டுநருக்கு சிறை, தடை

2026 செப்டம்பர் 8ஆம் தேதி அன்று, கடும் காயத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் லாரியை ஓட்டியது மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின்படி இன்னொரு குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், லாரி ஓட்டுநர் இர்வான் பின் முகமது இப்ராஹிம்க்கு 23 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் சிறையில் இருந்து வெளிவந்த நாளிலிருந்து 8 ஆண்டுகளுக்கு அவர் அனைத்து வகையான ஓட்டுநர் உரிமங்களையும் வைத்திருப்பதற்கோ அல்லது பெறுவதற்கோ தடை விதிக்கப்பட்டது.

ஓட்டுநர்கள் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் “சிங்கப்பூர் செய்திகள்” உடன்..

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.