வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய SMRT பேருந்து ஓட்டுநர் (49) விபத்தில் சிக்கி மரணித்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உட்லண்ட்ஸ் நோக்கிச் செல்லும் வழியில் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் (BKE) நேற்று (நவ.4) மாலை 3:30 மணிக்கு மோட்டார் சைக்கிள், பேருந்து மற்றும் லாரி ஆகியவை விபத்தில் சிக்கின.
மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய பேருந்து ஓட்டுநர் விபத்தில் சிக்கியதாகவும் பின்னர் அவர் மயக்கநிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
கவன குறைவாக வாகனம் ஓட்டிய 50 வயதுமிக்க பேருந்து ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆழ்ந்த இரங்கல்
தன் சக ஊழியரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார் SMRT பேருந்துகளின் துணை நிர்வாக இயக்குநர் வின்சென்ட் கே.
வேலை முடித்து வீடு திரும்பியபோது இந்த சம்பவம் நடந்ததாகவும், மறைந்த ஊழியரின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விசாரணை தொடர்வதாக காவல்துறை கூறியுள்ளது.
துவாஸில் லாரி விபத்து: 20 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி
சவுத் பிரிட்ஜ் ரோட்டில் பேருந்து மோதி ஒருவர் மரணம் – விசாரணையில் ஓட்டுநர்
சிங்கப்பூர் செய்திகள் மற்றும் இந்திய ஊழியர்கள் தொடர்பான செய்திகளை உடனே அறிந்துகொள்ள இணைந்திருங்கள் Singai Tamil மீடியாவுடன்..