சவுத் பிரிட்ஜ் ரோட்டில் பேருந்து மோதி ஒருவர் மரணம் – விசாரணையில் ஓட்டுநர்

Published: 3 Nov 2026, 12:51 PM |
SMRT bus hit one dies

சவுத் பிரிட்ஜ் ரோட்டில் நேற்று (நவ.2) SMRT பேருந்து மோதிய சம்பவத்தில் 73 வயதுமிக்க பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து காலை 11.40 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக காவல்துறை கூறியது. அதை பின்தொடர்ந்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கும் (SCDF) தகவல் கொடுக்கப்பட்டது.

இதனை அடுத்து, விரைந்து சென்று பார்த்தபோது பெண்மணி மயக்கநிலையில் இருந்ததாகவும் பின்னர் அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (SGH) கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆனால் அங்கு அவர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 41 வயதுமிக்க பேருந்து ஓட்டுநர் காவல்துறை விசாரணைகளுக்கு உதவி வருகிறார்.

இது தொடர்பான காணொளி வலைத்தளங்களில் பரவியது, அதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்திருப்பதை காணமுடிந்தது. மேலும் அவசரகால மீட்புக் குழுவினர் ஒருவருக்கு முதலுதவி செய்வதையும் அதில் காண முடிந்தது.

இந்த விபத்தில் தொடர்புடையது பேருந்து எண்.61 என்று SMRT பேருந்துகள் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் வின்சென்ட் கே கூறினார்.

மேலும், வாகனங்களுக்கு இடையே சாலையை கடக்கும் போது பேருந்து மோதி இந்த சம்பவம் ஏற்பட்டதாகவும் அவர் சொன்னார்.

உயிரிழந்த குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அவர், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் அவர் சொன்னார்.

பேருந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் வேறு பேருந்துக்கு மாற்றப்பட்டனர்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

லாரி மோதிய சம்பவத்தில் மோட்டர் சைக்கிள் ஓட்டி மரணம் – லாரி ஓட்டுநர் கைது

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.