சிங்கப்பூரில் தூய்மைப் பணிக்காக மூடப்படும் 4 உணவங்காடி நிலையங்கள்

Published: 23 Nov 2026, 1:50 PM |
Hawker centres Closure cleaning nov. 2026

சிங்கப்பூரில் ஹாக்கர் சென்டர்ஸ் (Hawker centres) எனப்படும் 4 உணவங்காடி நிலையங்கள் தூய்மைப் பணிக்காக மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்று (நவ.23) முதல் நாளை மறுநாள் (நவ.25) வரை இந்த மூடல் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 உணவங்காடி நிலையங்கள்

  • Dunman உணவு நிலையம் – நவ.23 மட்டும் மூடப்படும்
  • Holland வில்லேஜ் மார்க்கெட் மற்றும் உணவு நிலையம் – நவ.23 மட்டும் மூடப்படும்
  • பாசிர் பஞ்சாங் உணவு நிலையம் – நவ.23 மட்டும் மூடப்படும்
  • Fernvale ஹாக்கர் மற்றும் உணவு நிலையம் – நவ.23 முதல் நவ.25 வரை மூடப்படும்

அதே போல, மொத்தம் 21 உணவங்காடி நிலையங்கள் வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 6 வரை சுத்தம் செய்யும் பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

கிளமென்டி வெஸ்ட் ஸ்ட்ரீட் 2 புளோக் 726, தெலோக் பிளாங்கா ரைஸ் மார்க்கெட் மற்றும் கிம் கீட் பாம் மார்க்கெட் மற்றும் உணவு நிலையம் ஆகியவை பழுதுபார்த்து மற்றும் புதுப்பிப்பு பணிகளுக்காக டிசம்பர் நடுப்பகுதி முதல் மாத இறுதி நாள் வரை மூடப்பட்டிருக்கும்.

சுத்தம் நிறைந்த சுகாதாரமான சூழலில் சிங்கப்பூரர்கள் உணவருந்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மூடல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு (NEA) கூறியுள்ளது.

சிங்கப்பூரில் உள்ளாடைகளை திருடிய வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை

Photo: Pexels

சிங்கப்பூரின் முக்கிய அறிவிப்புகளை உடனே தெரிந்துகொள்ள சிங்கை தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைந்திருங்கள்!

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.