சிங்கப்பூரில் 2027ஆம் ஆண்டை சிறப்போடு வரவேற்கும் விதமாக டிச. 31, 2026 அன்று தீவு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
குறிப்பாக, சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்காவும் புத்தாண்டு சிறப்பு கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த முறை 15 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளிலும், 7 வெளிநாட்டு ஊழியர் பொழுதுபோக்கு நிலையங்களிலும் இந்த கொண்டாட்டங்களை ஊழியர்கள் கண்டு மகிழலாம்.
7 வெளிநாட்டு ஊழியர் பொழுதுபோக்கு நிலையங்கள்
- காக்கி புக்கிட்
- கிராஞ்சி
- பென்ஜுரு
- துவாஸ் சவுத்
- சூன் லீ
- உட்லண்ட்ஸ்
- தெருசன் (Terusan)
தங்கும் விடுதிகளுடன் சேர்த்து, இந்த பொழுதுபோக்கு நிலையங்களிலும் நேரடி கலை நிகழ்ச்சிகள், உணவு நிலையங்கள், கேளிக்கை விளையாட்டுகள் மற்றும் அதிஷ்ட குலுக்கல் போட்டிகளுடன் கொண்டாட்டங்கள் நடைபெறும்.
6 முக்கிய இடங்கள்
இது அல்லாமல், 6 முக்கிய இடங்களில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
- பூன் லே
- சோவா சூ காங்
- நீ சூன்
- பொங்கோல்
- தெம்பனீஸ்
- உட்லண்ட்ஸ்
மேற்கண்ட பகுதியில் வசிப்பவர்கள் கலை நிகழ்ச்சிகள், குடும்பத்தினருக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைகளையும் கண்டு மகிழ ஏற்பாடு செய்யப்படும்.
இதற்கான மேலதிக அறிவிப்புகளை மக்கள் கழகம் வரும் டிசம்பர் மாதம் வெளியிடும்.
தி கல்லாங் பகுதியில் 35 நிமிட மிக நீண்ட வாணவேடிக்கை நிகழ்வும் நடைபெறும், அது இரவு 9 மணிக்கு தொடங்கும்.
மரீனா பே பகுதியில் இரவு 10.30 மணி முதல் நான்கு பகுதிகளாக வாணவேடிக்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும், செந்தோசா மற்றும் கிளார்க் கீ பகுதியிலும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கிளார்க் கீ பகுதியில் நேரடி இசை நிகழ்ச்சி, DJ நிகழ்ச்சிகள், ஒளிக் காட்சிகள் உள்ளிட்டவை இலவச அனுமதியில் நடைபெறும்.
Photo: TodayOnline