சிங்கப்பூர் Work Pass வேலை அனுமதி விண்ணப்பங்களில் தவறான தகவல்களை சமர்பித்ததாக 7 பேர் மீதும் ஒரு துப்புரவு மேலாண்மை நிறுவனத்தின் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில் Double Huat நிறுவனத்தின் இயக்குநர் இங் லியோங் ஹூஅட் என்பவரும் ஒருவர்.
இவர் வெளிநாட்டு ஊழியர்கள் நால்வரின் EPass விண்ணப்பங்களில் தவறான தகவல்களை சமர்பித்ததாக 4 குற்றச்சாட்டுகளையும், மனிதவள அமைச்சகத்தின் (MOM) ஆய்வாளரிடம் போலியான அறிக்கையை சமர்பித்ததாக ஒரு குற்றச்சாட்டையும் எதிர்கொள்கிறார்.
பெட்டி எடுக்கும் / சுத்தம் செய்யும் வேலை
விண்ணப்பத்தில் குறிப்பிட்ட வேலைகளில் எதிலும் அவர்களை பணியமர்த்தும் எண்ணம் இயக்குநர் இங்குக்கு இல்லை என MOM தெரிவித்துள்ளது.
அதற்கு பதிலாக ஊழியர்கள் வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, சாங்கி விமான நிலையத்தில் விமானம் சுத்தம் செய்யும் பணியிலும் பயணப்பெட்டிகளை கையாளும் (baggage handling) வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டதாக MOM குறிப்பிட்டுள்ளது.
விசாரணையின்போது MOM அதிகாரிகளிடம் பொய்யான தகவல்களை அளித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
20 வெளிநாட்டு ஊழியர்களின் சம்பள விவரத்தில் போலி தகவல்
20 வெளிநாட்டு ஊழியர்களின் Work Pass விண்ணப்பங்களில் சம்பளம் தொடர்பான விவரங்களை தவறாக குறிப்பிட்டதாக Re Sustainability Cleantech என்ற துப்புரவு மேலாண்மை நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதில் 19 பேர் EPass மற்றும் S Pass வைத்திருப்பவர்கள் என்றும் அவர்கள் சாங்கி விமான நிலையத்தில் தூய்மை செய்யும் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் MOM கூறியுள்ளது.
அந்நிறுவனம், ஊழியர்களின் மாத சம்பளத்துடன் ஓவர் டைம் பார்க்கும் தொகையும் சேர்த்து அதிக சம்பளம் பெறுவதாக Work Pass விண்ணப்பங்களில் மிகைப்படுத்திக் காட்டியதாகக் கூறப்படுகிறது.
தண்டனை
சிங்கப்பூர் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின்கீழ், Work Pass விண்ணப்பங்களில் போலியான தகவல்களை சமர்ப்பித்தால், S$20,000 வரை அபராதம், இரு ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
MOM எச்சரிக்கை
வேலைவாய்ப்பு தொடர்பான விண்ணப்பங்களில் முதலாளிகளும், முகவர்களும் உண்மையான மற்றும் முழுமையான தகவல்களை மட்டுமே அளிக்க வேண்டும் என MOM எச்சரித்துள்ளது.
“இதுபோன்ற வெளிநாட்டு ஊழியர்களின் விண்ணப்பங்களில் தவறான தகவல்களை அளிப்பது கடும் குற்றமாகும்.”
இது மனிதவள அமைச்சகத்தின் வேலை அனுமதி கட்டமைப்பின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கிறது என்றும் மேலும் ஊழியர்கள் சுரண்டப்படுவதற்கும் இது வழிவகுக்கும் என்றும் MOM கூறியது.
“சொன்ன வேலை ஒன்று செய்வது ஒன்று” – 270 வெளிநாட்டு ஊழியர்கள் விதிமீறல்? – 45 நிறுவனங்களிடம் விசாரணை
சிங்கப்பூர் E Pass, S Pass மற்றும் Work Permit குறித்த செய்திகளை உடனே அறிய இணைந்திருங்கள்…