டவுன்ஸ்வில் ஆரம்பப்பள்ளி மாணவர்கள் சிலர் ஒன்றுகூடி $159 வெள்ளி செலவு செய்து வெளிநாட்டு கட்டுமான ஊழியர்களுக்கு உணவுகளை வாங்கிக்கொடுத்து மகிழ்த்தனர்.
AMK Hub அருகே உள்ள கட்டுமான தளத்தில் பணிபுரிந்த வெளிநாட்டு கட்டுமான ஊழியர்களுக்கு Wingstop எனும் உணவை மாணவர்கள் வாங்கி கொடுத்துள்ளனர்.
@pacao2098 என்ற Tiktok பயனர் நேற்று (நவ.18) வெளியிட்ட இந்த காணொளியில், 7 மாணவர்கள் ஒன்றாக கூடி உணவுகளை வழங்குகின்றனர்.
இந்த நற்செயலை இணையவாசிகள் பலர் பாராட்டி வருகின்றனர், மேலும் நிலப் போக்குவரத்து ஆணையமும் (LTA) மாணவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டது.
“சிங்கப்பூரை கட்டியெழுப்ப உதவுவதற்கு நன்றி”
உணவுகளைவழங்கி “உங்களுடைய சேவைக்கு நன்றி” என்று சில மாணவர்கள் கூறினர்.
சிலர் “சிங்கப்பூரை கட்டியெழுப்ப உதவுவதற்கு நன்றி” என்றும் கூறி நெகிழ்ந்தனர்.
கருத்து
அந்த காணொளி பதிவில் “அன்பை பரிமாறியதற்கு நன்றி” என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் கூறியது.
சிலர், “இது அரிதான செயல்” என்றும், “மாணவர்களின் பெற்றோரும் பள்ளியும் இதற்காக பெருமைப்பட வேண்டும்” என்றும் கருத்து தெரிவித்தனர்.
இந்த காணொளி லட்சக்கணக்கான பார்வைகளையும் ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பெற்று வைரலாகி வருகிறது.
சிங்கப்பூர் சாலையில் ஆட்டம் போட்ட வெளிநாட்டு ஊழியர்: காணொளி வைரல்
“Return Right” இயந்திரத்தில் மோசடி செய்த வெளிநாட்டு ஊழியர் – எச்சரித்த BCRS
PHOTOS: PACAO2098/TIKTOK