லிட்டில் இந்தியா MRT நிலையத்தில், வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்த பெண் ஒருவருக்கு ஓடி சென்று உதவிய ஊழியருக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
Foodpanda நிறுவனத்தின் வேலைபார்க்கும் ஓட்டுநரான பிரசிவன் குமரன் (26) என்ற அந்த ஊழியர் ஆபத்தில் இருந்த பெண்ணுக்கு உதவ முன்வந்தார்.
SBS ஊழியர்களுடன் சேர்ந்து சக்கர நாற்காலியில் ஓய்வு அறைக்கு அழைத்து சென்று பெண்ணுக்கு உதவினார்.
குளிர்ந்த நிலையில் இருந்த அந்த பெண்ணின் கால், கைகளை தேய்த்து விட்டு வெப்ப மூட்டினார், ஆம்புலன்ஸ் வரும் வரை அங்கேயே இருந்தார்.
பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பிறகே பிரசிவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், “Caring Commuter Week 2026” விருது வழங்கும் விழாவில் “Commendation Award” விருது பிரசிவனுக்கு வழங்கப்பட்டது. இதனை போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியோ வழங்கினார்.
மேலும், இந்த நிகழ்வில் ஐசக் கோ (20) என்ற இளைஞருக்கும் விருது வழங்கப்பட்டது. இவர் ரயிலில் சக பயணி எடுத்த வாந்தியை தரையில் அமர்ந்து சுத்தம் செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.
மேலும் சிலருக்கும் சிறப்பு விருதுகள் வாழங்கப்பட்டன.
சிங்கப்பூர் TEP Pass: வெளிநாட்டு ஊழியர்களை பாத்திரம் கழுவ, பொட்டலம் போட வைத்து சிக்கிய 6 பேர்
சிங்கப்பூரில் வெளியாகும் இலவச சலுகைகளை துல்லியமாக தெரிந்துகொள்ள சிங்கப்பூர் செய்திகள் வாட்ஸ்ஆப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்..