தேக்கா நிலையம் உட்பட 88 உணவு நிலையங்கள் தூய்மைப் பணிகளுக்காக தற்காலிக மூடல்

Published: 3 Sep 2026, 6:32 PM |
Tekka centre at Little india

லிட்டில் இந்தியாவின் பிரபலமான தேக்கா நிலையம் (Tekka Centre) உட்பட சிங்கப்பூர் முழுவதும் உள்ள 88 உணவங்காடி நிலையங்கள் வழக்கமான தூய்மைப் பணிகளுக்காக வேண்டி தற்காலிகமாக மூடப்பட உள்ளன.

வரும் செப்டம்பர் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் தூய்மைப் பணிகளுக்காக வேண்டி தேக்கா நிலையம் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அச்சமயம், தேக்கா நிலையத்தில் அமைந்துள்ள பிரபலமான உணவுக் கடைகளான,

  • ஜான் வெஸ்ட் மீ கோரிங் (Jaan West)
  • அலாவுதீன் பிரியாணி
  • ஹாஜி ஜோஹான் (Haji Johan)
  • டெல்லி லஹோரி (Delhi Lahori)

உள்ளிட்ட பல கடைகள் மேற்கண்ட இரண்டு நாட்களிலும் இயங்காது.

மற்ற பிரபல உணவு நிலையங்களும் மூடப்படும் நாட்களும்

  • நியூட்டன் உணவு நிலையம் – செப்டம்பர் 2 முதல் 4 வரை
  • ஆடம் ரோடு உணவு நிலையம் – செப்டம்பர் 7
  • மேக்ஸ்வெல் உணவு நிலையம் – செப்டம்பர் 14 முதல் 16 வரை
  • பீபுள்ஸ் பார்க் உணவு நிலையம் – செப்டம்பர் 7 முதல் 8 வரை
  • Chomp Chomp உணவு நிலையம் – செப்டம்பர் 28
  • Old Airport Road உணவு நிலையம் – செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 1 வரை
  • தெம்பனீஸ் ரவுண்டு மார்க்கெட் & உணவு நிலையம் – செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 வரை

பொதுமக்கள், சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழலில் கட்டுப்படியான விலையில் உணவு உட்கொள்ளும் வகையில் இந்த தூய்மைப் பணிகள் வழக்கமாக மேற்கொள்ளப்படுவதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு (NEA) தெரிவித்துள்ளது.

தூய்மை பணிகள் நடைபெறும் நாட்களில் உணவு கடைகள் இயங்காது என்பதை வாடிக்கையாளர்கள் மறந்துவிட வேண்டாம்.

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன், விரிவாக தெரிந்துகொள்ள சிங்கை தமிழ் WhatsApp குழுவில் இணைத்துக்கொள்ளுங்கள்!

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.