கத்தோங்கில் மரம் வெட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த 38 வயது ஊழியர் மரணம்

Published: 15 Oct 2026, 1:37 PM |
Katong Cranborne Road worker death

சிங்கப்பூர்: கத்தோங்கில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மரம் வெட்டும் வேலையில் ஈடுபட்டிருந்து 38 வயது ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தை தொடர்ந்து அவர் சுயநினைவின்றி டான் டொக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் அவர் மரணித்ததாக செய்திகள் கூறுகின்றன.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் அக்டோபர் 13 (செவ்வாய்) அன்று கிரான்போன் (Cranborne) சாலையில் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

அன்று பிற்பகல் 2.30 வாக்கில் போலீசாருக்கும், SCDF அதிகாரிகளுக்கும் சம்பவம் குறித்து தகவல் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சதிச்செயல் ஏதும் நடந்ததாக காவல்துறை சந்தேகிக்கவில்லை, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விபத்து எப்படி நடந்தது?

ஊழியர் மரம் வெட்டும் பணியை மேற்கொண்டிருந்தபோது, மரம் அடியோடு சாய்ந்ததாகவும் அதோடு சேர்த்து ஊழியரும் கீழே விழுந்ததாகவும் மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

அந்த ஊழியர் Soh & Tan என்டர்ப்ரைசஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என்பதும் கூடுதல் தகவல்.

விசாரணைகள் நடைபெறும் வேளையில், அது முடியும் வரை மரம் ஏறி வெட்டும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று MOM உத்தரவிவிட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைப்பில் இருங்கள்!

துவாஸ் போர்ட் கடலில் விழுந்த இரு ஊழியர்கள் மரணம்

ஜுரோங் போர்ட் ரோடு கட்டுமானத் தளத்தில் 35 வயது நபர் மரணம்

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.