ஜுரோங் போர்ட் ரோடு கட்டுமானத் தளத்தில் 35 வயது நபர் மரணம்

Published: 13 Sep 2026, 1:26 PM |
Jurong port road

சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட வேலை தொடர்பான விபத்து ஒன்றில் 35 வயதுடைய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி ஜுரோங் போர்ட் சாலை (Jurong Port Road) பகுதியில் இந்தச் சம்பவம் நடந்தது.

அன்றிரவு இரவு சுமார் 8:25 மணியளவில் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை மதர்ஷிப் ஊடகத்திடம் உறுதிப்படுத்தியது.

மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) துணை மருத்துவ குழுவினர், அந்த ஊழியர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இதில் சதிச் செயல் நடந்திருக்க வாய்ப்பில்லை என காவல்துறை கருதுகிறது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலதிக விவரங்கள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும். இணைப்பில் இருங்கள்..

இதற்கு முன்னர், துவாஸ் (Tuas) தொழிற்பேட்டையில் ஆக.29 அன்று நடந்த சம்பவத்தில் ராஜ் மகேஷ்குமார் (29) என்ற ஊழியர் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முருகநாதன் கதிர்வேல் (25) என்ற ஊழியர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.