துவாஸ் (Tuas) தொழிற்பேட்டையில் கடந்த ஆக.29 அன்று நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக இந்திய நாட்டை சேர்ந்த 25 வயதுமிக்க ஊழியர் ஒருவர் மீது இன்று (ஆகஸ்ட் 31) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
துவாஸ் சவுத் அவென்யூ 9-ல் நடந்த இந்த சம்பவத்தில் 29 வயதான ராஜ் மகேஷ்குமார் என்பவரை சோப்பர் கத்தி வைத்து கழுத்தில் வெட்டிக் கொன்றதாக முருகநாதன் கதிர்வேல் (25) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக CNA மற்றும் The Straits Times ஆகியவை செய்தி வெளியிட்டுள்ளன.
இருவரும் முன்பு ஒருவருக்கொருவர் பழக்கமானவர்கள் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி அன்று, கதிர்வேல் மீதான அடுத்த விசாரணை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவாஸ் சவுத் ஸ்ட்ரீட் 15 இல் இருந்து நேற்று முன்தினம் (ஆக.29) இரவு சுமார் 10:10 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக காவல்துறை கூறியுள்ளது.
அதன் பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர், அவர்கள் அங்கு சென்றபோது 29 வயது நிரம்பிய ஆடவர் ஒருவர் அசைவின்றி கிடந்ததை கண்டதாக கூறியுள்ளனர்.
பின்னர் அவரை சோதித்த சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை மருத்துவர்கள், ஆடவர் இறந்ததை சம்பவ இடத்திலேயே உறுதி செய்து அறிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 25 வயதுமிக்க நபர், 4 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
சிங்கப்பூர் சட்டத்தின்படி, கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
கொலைக்கான காரணம் என்ன என்பதை காவல்துறை இன்னும் வெளியிடவில்லை. தொடர்ந்து இணைப்பில் இருங்கள் சிங்கை தமிழ் செய்தியுடன்..
வெளிநாட்டு ஊழியர்கள், MOM தொடர்பான செய்திகள் மட்டும் அறிந்துகொள்ள எங்களுடைய வாட்சப் குழுவில் இணைந்திருங்கள். (தேவையற்ற பதிவுகள் இடம்பெறாது)