துவாஸ் சவுத்தில் 29 வயது ஆடவரை தீர்த்துக்கட்டியதாக ஒருவர் மீது குற்றச்சாட்டு

Published: 31 Aug 2026, 1:47 PM |

துவாஸ் சவுத் பகுதியில் 29 வயது நிரம்பிய ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 25 வயதுமிக்க சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (ஆக.31) அவர் மீது குற்றம் சட்டப்படவுள்ளது.

துவாஸ் சவுத் ஸ்ட்ரீட் 15 இல் இருந்து நேற்று முன்தினம் (ஆக.29) இரவு சுமார் 10:10 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக காவல்துறை கூறியுள்ளது.

தொழிற்சாலை நிரம்பிய பகுதியான அங்கு ஆள் நடமாட்டம் இருக்காது என்றும், அதன் அருகில் ஊழியர்கள் தங்கும் விடுதி ஒன்று உள்ளதாகவும் செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.

அதன் பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர், அவர்கள் அங்கு சென்றபோது 29 வயது நிரம்பிய ஆடவர் ஒருவர் அசைவின்றி கிடந்ததை கண்டதாக கூறியுள்ளனர்.

பின்னர் அவரை சோதித்த சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை மருத்துவர்கள், ஆடவர் இறந்ததை சம்பவ இடத்திலேயே உறுதி செய்து அறிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 25 வயதுமிக்க சந்தேக நபர் ஒருவர், 4 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆரம்ப விசாரணையின் அடிப்படையில், இருவரும் இதற்கு முன்னர் ஒருவருக்கொருவர் அறிந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்த காவல்துறை விசாரணை தொடர்கிறது.

கைதான ஆடவர் மீது, 1871- தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302(1)-இன் கீழ் கொலைக் குற்றம் சாட்டப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.

சிங்கப்பூர் சட்டத்தின்படி, கொலை குற்றம் நிரூபணமானால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

கொலைக்கான காரணம் என்ன? உயிர்நீத்த ஆடவர் யார்? கைது செய்யப்பட்டவர் விவரம் உள்ளிட்ட தகவல்களை காவல்துறை வெளியிடவில்லை.

Singai Tamil தளத்தில் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும். சிங்கப்பூர் செய்திகள் -வுடன் இணைந்திருங்கள்.

Illustrative purpose Photo: Canva

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.