சிங்கப்பூரில் Work Permit புதுப்பிக்கப்படவில்லை – 16 ஆண்டுகள் வேலை.. நாட்டை விட்டு வெளியேறிய ரிபோன் சௌத்ரி

Published: 24 Nov 2026, 3:05 PM |
work permit migrant-worker-activist-ripon-chowdhury leave singapore

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான உரிமைகளை பேசிவந்த செயல்பாட்டாளர் ரிபோன் சௌத்ரியின் Work Permit அனுமதி புதுப்பிக்கப்படாததால் அவர் சிங்கப்பூர் விட்டு கடந்த நவ.21 அன்று வெளியேறினார்.

அனைத்து நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கும் குறைந்தது $2,000 வெள்ளி மாத சம்பளமாக கொடுக்க வேண்டும் என்று காணொளி வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 38 வயதான பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த அவர், தற்போது சிங்கப்பூரை விட்டு வெளியேறினார்.

அவர் வெளியிட்ட அந்த காணொளி 5 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.

ஆதரவு மனு

அவரை சிங்கப்பூரிலேயே தங்க வைக்க வேண்டி பல்வேறு ஆதரவு அமைப்புகளும் செல்வாக்கு மிக்க நபர்களும் ஆதரவு தெரிவித்தனர். மேலும் அவருக்காக கையெழுத்து கோரல் மனு ஒன்றும் தொடங்கப்பட்டது.

நேற்றைய (நவம்பர் 23) நிலவரப்படி அதில் சுமார் 3,430 பேர் கையெழுத்திட்டிருந்தனர்.

அனைத்து முயற்சிகளும் பயனளிக்காத நிலையில் அவர் சிங்கப்பூரை விட்டு வெளியேறினார். சாங்கி விமான நிலையத்தில் அவரை வழியனுப்ப, சமூக செயற்பாட்டாளர் கோகிலா அண்ணாமலை உள்ளிட்ட ஆதரவாளர்கள் பலர் ஒன்று கூடி இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

16 ஆண்டுகள் வேலை பார்த்தவர்

சிங்கப்பூரில் 16 ஆண்டுகளாக வேலை செய்து வந்த ரிபோன் சௌத்ரியின் Work permit அனுமதி புதுப்பிக்கப்படாது என்று அக்டோபர் 1ஆம் தேதி அவரிடம் சொல்லப்பட்டதாக இன்ஸ்டாகிராம் காணொளியில் கடந்த நவ.2 அன்று அவர் கூறியிருந்தார்.

அதன் பின்னர் அவரின் ஆதரவாளர்கள் அவருக்காக இணையவழி ஆதரவை தெரிவித்து வந்தனர்.

அவரின் Work Permit அனுமதியை புதுப்பிக்க வேண்டி, அவர் வேலை செய்த முன்னாள் நிறுவனமான Seatrium, தேசிய தொழிற் சங்க காங்கிரஸ் (NTUC) மற்றும் மனிதவள அமைச்சகம் (MOM) ஆகியவையிடம் பலர் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், அவரின் Work Permit அனுமதி நீடிக்கப்படவில்லை. அதற்கான காரணமும் வெளியாகவில்லை.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு சேவை

ரிபோன், Migrant Workers Singapore (MWS) என்ற ஆதரவு குழுவை 2018 ஆம் ஆண்டு தொடங்கினார்.

இக்குழு, ஊழியர் தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் லாரிகளில் பாதுகாப்பற்ற முறையில் ஏற்றிச் செல்லப்படும் வெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்தும் பல்வேறு சிக்கல்களை வெளிக்கொண்டு வந்தது.

ஆண்டுகள் கடந்து செல்ல செல்ல ஆதரவாளர்கள் பலர் இவரை பின்தொடர ஆரம்பித்தனர்.

சம்பளம் குறித்த காணொளி

கடந்த செப். மாதம், சிங்கப்பூர் அரசு பதவிகளில் இருப்பவர்களுக்கு 9 சதவீதம் வரையிலான சம்பள உயர்வு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து ரிபோன் ஒரு காணொளி வெளியிட்டார்.

அதில் சிங்கப்பூரில் வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்து வருகிறது என்றும் வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தை பிரதமர் சம்பளத்தோடு ஒப்பிட்டும் அவர் பேசியிருந்தார்.

அதாவது, வெளிநாட்டு ஊழியர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக $2,000 வெள்ளி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

“நேர்மையாகப் பேசவே முயன்றுள்ளேன்”

தனது Work Permit அனுமதி புதுப்பிக்கப்படாது என்பதை அறிந்த பிறகு ரிபோன் மற்றுமொரு காணொளியை வெளியிட்டார்.

அதில், “என்னுடைய அனுமதி (Work Permit) ஏன் புதுப்பிக்கப்படவில்லை என்று என்னால் சொல்ல முடியாது. இருப்பினும், வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நான் எப்போதும் நேர்மையாகப் பேசவே முயன்றுள்ளேன்,” என்றும் ரிபோன் கூறினார்.

இந்த காணொளி வெளியான பிறகு அவருக்கான ஆதரவும் பெருகியது, இதனால் சிங்கப்பூரில் அவர் தொடர்ந்து இருக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரும் கையெழுத்து மனு உருவாக்கப்பட்டது.

சிங்கப்பூரில் 14 ஆண்டுகள் கடின உழைப்பு: சொந்த கிராமத்தில் பிரம்மாண்ட வீடு கட்டிய வெளிநாட்டு ஊழியர்

சிங்கப்பூர் Work Permit விண்ணப்பம், நடைமுறையில் புதிய மாற்றம் – நவ.29 முதல் அமல்

Photos from FB and IG

வெளிநாட்டு ஊழியர்களுக்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பூர் செய்திகள் வாட்ஸ்ஆப் சேனலில் இணைந்திருங்கள்…

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.