சிங்கப்பூர் Work Permit வேலை அனுமதி விண்ணப்பம் மற்றும் நடைமுறையில் புதிய மாற்றத்தை மனிதவள அமைச்சகம் (MOM) அறிவித்துள்ளது. இது வரும் நவம்பர் 29, 2026 முதல் நடப்புக்கு வரும்.
தற்போதைய நடைமுறை
தற்போதைய நடைமுறைப்படி, இந்தியா உள்ளிட்ட நாட்டை சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் (மலேசியர்கள் அல்லாதோர்) சிங்கப்பூர் வந்த இரண்டாவது நாளே IPA (In-principle approvals) கடிதத்தை வைத்து வேலையை தொடங்க முடிந்தது.
புதிய நடைமுறை
வரும் நவம்பர் 29, 2026 முதல், அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் Work Permit வேலை அனுமதி பெற்ற பிறகே வேலையை தொடங்க முடியும் அல்லது Temporary Permit என்னும் தற்காலிக அனுமதி (TP) கடிதம் பெற்ற பிறகே வேலையை தொடங்க முடியும்.
வேலையை விரைவாக தொடங்க வேண்டிய கட்டாயம் இருந்தால், myMOM Portal இணைய சேவை மூலமாக தற்காலிக அனுமதிக்கு (TP) முதலாளிகள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுடைவர்களுக்கு உடனடியாக தற்காலிக அனுமதி (TP) கடிதம் வழங்கப்படும், அந்த கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து ஊழியருக்கு அனுப்பலாம்.
முக்கியமாக கவனிக்க வேண்டியது, தற்காலிக அனுமதி (TP) கடிதம் வழங்கப்பட்ட நாளில் இருந்தே வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை கட்டணம் கணக்கிடப்படும்.
TP அனுமதி விண்ணப்பம்
இந்திய ஊழியர்களுக்கு TP அனுமதிக்காக வேண்டி, வேலை தொடங்க வேண்டிய நாளிலும் விண்ணப்பிக்கலாம் அல்லது அதற்கு முன்கூட்டியும் விண்ணப்பிக்கலாம்.
அப்படி முன்கூட்டியே விண்ணப்பித்தாலும் சிங்கப்பூர் வந்த 2வது நாளிலிருந்து தான் TP அனுமதி கடிதம் வழங்கப்படும் என MOM கூறியுள்ளது.
புதிய வசதி அறிமுகம்
வரும் நவ.29 முதல், myMOM Portal தளத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய “View/Update Foreigner Profile” வசதியை முதலாளிகள் பயன்படுத்தலாம்.
அதன் மூலமாக, ஊழியரின் தனிப்பட்ட விவரங்கள், பணி (occupation), வேலைவாய்ப்பு தொடர்பான வரலாறு மற்றும் பாதுகாப்புப் பத்திர (security bond) நிலை ஆகியவற்றை பார்க்கவும், அப்டேட் செய்யவும் முடியும்.
ஆனால், ஊழியரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பணி (occupation) தொடர்பான புதுப்பிப்புகளை அப்டேட் செய்ய WP Online-யே பயன்படுத்த வேண்டும். இதனை 2027ஆம் ஆண்டில் myMOM Portal-இல் கொண்டுவருவதற்கான வேலைகளை MOM செய்து வருகிறது.
IPA செல்லுபடி காலம் நீட்டிப்பு
IPA காலாவதியாகும் நாளுக்கு முன்னரே வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூருக்குள் அழைத்துவர முடியாத நிலை ஏற்பட்டால், அதன் செல்லுபடி காலத்தை நீட்டிக்கவும் முதலாளிகளுக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது.
நவ.29 முதல், WP Online-க்குப் பதிலாக myMOM Portal வழியாக முதலாளிகள் விண்ணப்பிக்க வேண்டும்.
சிங்கப்பூர் S Pass அனுமதியில் வேலை பெறுவது எப்படி? முழு வழிகாட்டி
சிங்கப்பூரில் வெயிலில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டாய விதிகள்: டிச.1 முதல் – MOM அறிவிப்பு
Work Permit, S pass, E Pass உள்ளிட்ட அனைத்து வேலை அனுமதி அட்டைகள் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் சிங்கப்பூர் செய்திகள் வாட்ஸ்ஆப் குழுவில்…