சிங்கப்பூரில் வேலை செய்ய வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் அனுமதிகளில் ஒன்று S Pass ஆகும். இது work permit வேலை அனுமதிக்கு அடுத்த நிலை என்றும் கூறலாம்.
ஏனெனில் நடுத்தர அளவிலான திறன் கொண்ட ஊழியர்களுக்கு இந்த S Pass வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதாவது, ஆய்வக மற்றும் பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர், தகவல் தொழில்நுட்ப (IT) துணை நிபுணர், தளவாட மேற்பார்வையாளர் போன்ற வேலைவாய்ப்புகள் S Pass அனுமதியின்கீழ் வழங்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் இந்தியர்கள் பெரும்பாலானோர் S Pass அனுமதியின்கீழ் வேலை செய்து வருகின்றனர். Work permit போல் இல்லாமல் S Pass அனுமதிக்கு குறைந்த தகுதி சம்பளம் வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவில் S Pass அனுமதிக்கு தேவையான தகுதிகள், சம்பளம், யார் விண்ணப்பிக்க முடியும், இந்தியாவில் இருந்து விண்ணப்பிக்கலாமா, கல்வி தகுதி, PR கிடைக்குமா உள்ளிட்ட அனைத்தையும் பார்ப்போம்.
S Pass
ஓரளவு படித்தவர்கள் அதிகம் தேர்வு செய்யும் அனுமதியாக இந்த S Pass இருந்து வருகிறது. இந்த அனுமதி அட்டை கிடைப்பதில் சற்று சிரமம் இருக்கும் காரணத்தால் பெரும்பாலானோர் கிடைத்த அனுமதிகளில் வேலைக்கு செல்கின்றனர்.
சிங்கப்பூர் நிறுவனம் அல்லது முதலாளி வெளிநாட்டவர்களுக்கான வேலையை S Pass அனுமதியில் கீழ் வழங்க முடியும்.
ஏஜென்ட்
முதலில் நல்ல ஏஜென்ட்டை தேர்வு செய்வது மிக முக்கியமானது, ஏனெனில் பல போலி ஏஜென்டுகள் அதிக பணத்தை மோசடியாக பெற இதில் வாய்ப்பு அதிகம் உள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள நல்ல ஏஜென்டுகளை தேர்வு செய்வது சிறந்தது. அப்போது தான் அவர்களை நாம் இலகுவாக அணுக முடியும்.
பின்னர் வேலைக்கு தேவையான Resume மற்றும் ஆவணங்களை தயார் செய்து வைத்து கொள்ளுங்கள்.
அதன் பின்னர் ஏஜென்ட் உங்களை நேர்காணல் எடுத்து வேலைக்கு எடுக்க எவ்வளவு அமவுண்ட் வரும் போன்ற விவரங்களை உங்களுக்கு கூறும்.
தொகை அதிகமாக இருந்தால் வேலையை தேர்வு செய்யாமல் இருப்பது சிறந்தது. நீங்கள் வேலைக்காக வேண்டி செலவு செய்த தொகையை 7, 8 மாதங்களுக்குள் சம்பளமாக எடுக்க முடியும் என்றால் அது சரியாக இருக்கும்.
மருத்துவ பரிசோதனை
வேலைக்கான மருத்துவ பரிசோதனை தேவை என்றால் குறைவான கட்டணத்தில் அதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 5,000 அல்லது 6,000 கேட்டால் அது ஏமாற்றுவேலை.
நிறுவன நேர்காணல்
வேலைக்கு நாம் சரி சொன்ன பின்னர் நிறுவனம் சார்பாக கண்டிப்பாக ஒரு நேர்காணல் இருக்கும். அதில் என்ன வேலை, சம்பளம், தங்கும் இடம் போன்ற வேலை தொடர்பான சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம்.
எல்லாம் உங்களுக்கு ஓகே என்றால், நிறுவனம் நேரடியாக ஏஜென்டை தொடர்பு கொண்டு மற்ற விவரங்களை பேசிக்கொள்ள சொல்லி முடித்துவிடும்.
அதன் பின்னர் ஏஜென்ட் உங்களை தொடர்பு கொண்டு வேலை உறுதி ஆகிவிட்டது எனவே முன்பணம் தொகையை செலுத்த கேட்கும். முன்பணமாக அதிக தொகையை கொடுக்க வேண்டாம்.
ஏனெனில், விண்ணப்பிக்கும் தொகை என்பது 130 சிங்கப்பூர் டாலர் வரும். அதற்கான இந்திய தொகை ஏறக்குறைய 10,000 தான் வரும்.
விண்ணப்பம்
முன்பணம் செலுத்திய பின்னர் வேலைக்காக வேண்டி சிங்கப்பூர் MOM யிடம் விண்ணப்பிப்பார்கள். உண்மையிலேயே விண்ணப்பித்து இருந்தால் 2 நாட்களில் MOM தளத்தில் Pending என்று தோன்றும்.
45 நாட்களுக்குள் approval கிடைக்கலாம், எனவே வேலைக்கு approval கிடைத்துவிட்டதா என்று MOM தளத்தில் அடிக்கடி சோதித்து கொள்ள முடியும்.
வேலை Approval ஆகிவிட்டது என்றால் பின்னர் IPA அனுப்பப்படும், அதில் உள்ள விவரங்களை சரி பார்த்துக்கொள்வது சிறந்தது.
பின்னர் ஏஜென்ட்க்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகையை விமான டிக்கெட் போட்ட பிறகு செலுத்துவது சிறந்தது என்று பல்வேறு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இறுதியாக தேவையான அனைத்து ஆவணங்ககளையும் சரியாக எடுத்துக்கொண்டு நீங்கள் சிங்கப்பூர் பறக்க தயார் ஆகலாம்.
சம்பளத்தை பொறுத்தவரை IPA வில் குறிப்பிட்ட தொகை கொடுக்கப்பட வாய்ப்பு இல்லை, நேர்காணலின் போது உங்களுக்கு சொல்லப்பட்ட தொகை சம்பளமாக கொடுக்கப்படும்.
அதேபோல, RMI சான்றிதழ் apply செய்துவிட்டு வேலை வாங்கி தருவதாக சிலர் ஏமாற்றுவதாக புகார்கள் எழுகின்றன. இந்த சான்றிதழ் apply செய்து கிடைக்கவே 3 வாரம் ஆகிவிடும். அதுக்குள் உங்களுக்கு சொன்ன வேலைவாய்ப்பு இன்னொருவருக்கு சென்றுவிடலாம்.
PR க்கு apply செய்ய முடியுமா?
S Pass வைத்திருப்போர் PTS திட்டத்தின்கீழ் 3 ஆண்டுகளுக்கு பின் PR க்கு விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
தொடர்ந்து அப்டேட் செய்யப்படும் இணைப்பில் இருங்கள்…
சிங்கப்பூரில் Work Permit பெறுவது எப்படி? – முழு வழிகாட்டி
சிங்கப்பூரில் வெயிலில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டாய விதிகள்: டிச.1 முதல் – MOM அறிவிப்பு
சிங்கப்பூரில் Jaywalking குற்றம்.. மீறினால் அபாரதம் – புதிதாக வருவோர் அறிந்துகொள்ள வேண்டியவை!