சிங்கப்பூரில் 14 ஆண்டுகள் கடின உழைப்பு: சொந்த கிராமத்தில் பிரம்மாண்ட வீடு கட்டிய வெளிநாட்டு ஊழியர்

Published: 18 Nov 2026, 1:54 PM |
சிங்கப்பூரில் 14 ஆண்டுகள் கடின உழைப்பு: சொந்த கிராமத்தில் பிரம்மாண்ட வீடு கட்டிய வெளிநாட்டு ஊழியர் - Bangaladesh Worker build house

சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் வெளிநாட்டு ஊழியர் சொந்த ஊரில் சுமார் ரூ.1.87 கோடி மதிப்பில் தனது பிரம்மாண்ட கனவு வீட்டை கட்டியுள்ளார். அதனை பார்வையிட தனது சிங்கப்பூர் முதலாளியையும் அழைத்துள்ளார்.

சுமார் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த சுமோன் என்ற ஊழியர், வேலையின்போது கவனித்த சிங்கப்பூர் உள் அலங்கார கட்டிட வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டு அதே பாணியில் வீட்டை கட்டி முடித்துள்ளார்.

சுமார் 25 மில்லியன் பங்களாதேஷி டாக்கா மதிப்பில் அதாவது இந்திய ரூபாயில் சுமார் 1.87 கோடி மதிப்பில் இந்த வீட்டை கட்டி அலங்கரித்துள்ளதாக கூறியுள்ளார்.

வீட்டின் நுழைவு வாயிலில் பங்களாதேஷ் மற்றும் சிங்கப்பூர் நாட்டின் தேசிய கொடிகளை வடிவமைத்து காட்சிப்படுத்தியுள்ளார் சுமோன்.

முதலாளிக்கு அழைப்பு

சிங்கப்பூரில் தாம் சம்பாதித்த பணத்தை கொண்டு கட்டிய இந்த பிரம்மாண்ட வீட்டை காண தன்னுடைய முதலாளிக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சுமோனின் அழைப்பை ஏற்று முதல் முறையாக பங்களாதேஷ் நாட்டுக்கு சென்ற முதலாளி, அவரின் கனவு வீட்டை பார்த்து மகிழ்ந்தார்.

மேலும், அது கிராமப் பகுதி என்பதால் வீடு, அருகில் உள்ள இடம் மற்றும் விவசாயத்தையும் பார்த்து மிகவும் அழகாக இருப்பதாக கூறி அவர் நெகிழ்ச்சி அடைந்தார்.

இணையவாசிகள் பாராட்டு

இந்த வீட்டின் காணொளி Facebook தளத்தில் பதிவேற்றப்பட்டு வைரலாக பரவி வருகிறது.

அதன் கமண்ட் பிரிவில் பலர் அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

சிலர் ஊழியரின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு இந்த கனவு வீடு என பாராட்டினர்.

சிங்கப்பூர் விபத்தில் சிக்கி 73% தீக்காயம்… 3 மாதங்கள் கோமா: சொந்த ஊரில் பள்ளிகளை கட்டிய “பங்களாதேஷ் ஊழியர்” – நெகிழ்ச்சி கதை

பர்ஸை தொலைத்த இந்திய ஊழியருக்கு சொந்த பணத்தை கொடுத்து உதவிய பேருந்து ஓட்டுநர் – சிங்கப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.