பார்சல் மூலம் சிகரெட் பெட்டிகளை கடத்திய வெளிநாட்டவர்கள் 8 பேர் கைது

Published: 24 Nov 2026, 11:31 AM |
8 Foreigners illegal cigarettes parcel consignment

சிங்கப்பூரில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகளை கடத்திய வெளிநாட்டவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

சீன நாட்டை சேர்ந்த அவர்களுக்கு வயது 29 முதல் 44 வரை இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

சோதனை

கடந்த நவம்பர் 6 முதல் 11ஆம் தேதி வரை நடந்த சோதனை நடவடிக்கையை சிங்கப்பூர் சுங்கத் துறையும் குடிநுழைவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையமும் (ICA) சேர்ந்து நடத்தின.

இந்த அதிரடி சோதனை நடவடிக்கையில் தீர்வை செலுத்தப்படாத 113-க்கும் அதிகமான சிகரெட் அட்டை பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சுமார் S$17,325 தொகை சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஏய்ப்பு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்சல் வழியே கடத்தப்பட்ட சிகரெட்

பார்சல் வழியே கடத்தப்பட்ட இந்த சிகரெட் அட்டை பெட்டிகள் சாங்கி விமான சரக்கு நிலையத்தில் அடையாளம் காணப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவைகள் காபி மற்றும் புத்தகங்கள் என பொய்யாக அறிவிக்கப்பட்டு கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கைது

ஆங் மோ கியோ, பாலஸ்டியர், சைனாடவுன், உட்லண்ட்ஸ் மற்றும் யுஷுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த பார்சல்களை பெறவிருந்தவர்கள் சுங்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அவைகள் இணையம் வழியாக வாங்கப்பட்டு சிங்கப்பூருக்கு பார்சல் வழி அனுப்பப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.

மேலும் சந்தேக நபர்கள் சிலரின் வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட கூடுதல் சோதனையில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

பிடிபட்ட 8 பேரில் நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மற்றவர்கள் மீதான விசாரணைகள் தொடர்கின்றன.

சட்டம்

இதுபோன்று வரி ஏய்ப்பு செய்யும் குற்றவாளிகளுக்கு, ஏய்க்கப்பட்ட GST-யை போல் 40 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படலாம் மற்றும்/அல்லது 6 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

SIA விமான பணிப்பெண்ணிடம் சீண்டல்.. லிட்டில் இந்தியாவில் அமளியில் ஈடுபட்ட வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

சிங்கப்பூரில் பணிபுரிந்த ஊழியர் சாலை விபத்தில் மரணம்

PHOTO: ICA and Singapore Customs

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.