சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானத்தில் பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதுடன், இன்னொரு சம்பவத்தில் காவல்துறை அதிகாரி மீது எச்சில் துப்பிய 23 வயது வெளிநாட்டு ஊழியருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
SIA விமானத்தில் கடந்த செப்.11 ஆம் தேதி பயணித்து சிங்கப்பூர் வந்த கொண்டொகர் Md யாமின் என்ற பங்களாதேஷ் ஊழியர், விமான பணிப்பெண்ணின் பின்பகுதியை சில வினாடிகள் தகாத முறையில் தொட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பணிப்பெண் தொடக்கூடாது என யாமினை எச்சரித்துள்ளார், அதற்கு சிரித்துக்கொண்டே யாமின் எதும் கூறாமல் இருந்துள்ளார். பின்னர் பணிப்பெண் நடந்ததை சக விமான ஊழியர்களிடம் கூறினார்.
இந்நிலையில் அவர் செய்த தகாத செயல் குறித்து காவல்துறையிடம் புகார் கூறப்பட்டு, விமானம் சாங்கி விமான நிலையம் வந்தவுடன் யாமின் கைது செய்யப்பட்டார்.
லிட்டில் இந்தியாவில் அட்டூழியம்
தனிநபர் பிணையில் விடுவிக்கப்பட்ட யாமின், அக்டோபர் 7ஆம் தேதி அன்று லிட்டில் இந்தியாவின் ஜாலான் பெர்சே பகுதியில் அழுதுகொண்டே கத்தி புலம்பிக்கொண்டு இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அப்போது அவர் மது போதையில் இருந்ததாகவும் அவர் மூக்கில் இருந்து இரத்தம் வழிந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
பின்னர் மருத்துவ குழுவினர் அவருக்கு முதலுதவி அளிக்க முயன்றபோது யாமின் ஒத்துழைக்க மறுத்து தரையில் படுத்து அமளியில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கைது செய்யப்பட்ட யாமின் காவல்துறை வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகரெட் வேண்டும் என கேட்டு அதிகாரிகளிடம் அட்டூழியம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவரின் கால்களை பிடித்து கொண்டிருந்த காவலர் ஒருவர் மீது அவர் எச்சில் துப்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட யாமினுக்கு நேற்று (நவ.23) இரண்டு மாதங்கள் மற்றும் எட்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ளாடைகளை திருடிய வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை
Photo: Today
வெளிநாட்டு ஊழியர்களுக்காக தனித்துவமாக உருவாக்கப்பட்ட Singai Tamil வாட்ஸ்ஆப் சேனலில் இணைந்திருங்கள்!