சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து 698 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த நவ.21 அன்று சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் வந்தது. அதில் தங்கம் கடத்தல் நடப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து, விமானம் தரையிறங்கியதும் சுங்கத் துறையின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விமானத்தில் பயணித்து வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அப்போது துளையிட பயன்படும் டிரில்லிங் இயந்திரத்தை இருவர் கொண்டு வந்தது தெரிந்தது, சோதித்து பார்த்ததில் பசை வடிவில் தங்கத்தை அதில் மறைத்து வைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த அதிகாரிகள், 698 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 24 காரட் தங்கத்தின் இந்திய மதிப்பு ரூ.87.64 லட்சம் இருக்கும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதிகாரிகளிடம் பிடிபட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து சிங்கப்பூர்.. அதிகாரியிடம் சிக்கிய பயணி – பணம் பறிமுதல்
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த 39 வயது நபர் கைது
Photo: Pexels