“$12,000 செலுத்தி வந்தோம்.. 2 மாதங்களாக சம்பளம் கொடுக்கல” – 240 வெளிநாட்டு ஊழியர்கள் ஒன்றுகூடி புகார்

Published: 24 Oct 2026, 2:02 PM |
Migrant Workers Salary unpaid

சிங்கப்பூரில் வேலை செய்யும் கிட்டத்தட்ட 240 வெளிநாட்டு ஊழியர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும், அவர்களில் சிலர் வேலையை பெறுவதற்காக வேண்டி சுமார் $12,000 வரை செலுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் பங்களாதேஷில் இருந்து வந்த ஊழியர்கள் என்றும், அதில் சிலர் ஜூலை மாதம் தான் சிங்கப்பூருக்கு வந்தார்கள் என்றும் NTUC துணைப் பொதுச்செயலாளர் டெஸ்மண்ட் சூ, நேற்று (அக்டோபர் 23) இன்ஸ்டாகிராம் பதிவில் கூறினார்.

ஒன்றுகூடி புகார்

பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள், தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்ற புகாருடன் வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் (MWC) பொழுதுபோக்கு நிலையத்தில் ஒன்றுகூடியதாக அவர் கூறினார்.

அவர்கள், Process Maintenance Solutions Pte Ltd மற்றும் Jurong Technical & Construction Pte Ltd ஆகிய நிறுவனங்களில் பணிபுரிகின்றனர் என்றும் NTUC தகவல் கூறியுள்ளது.

கடந்த அக்டோபர் 19, 20 தேதிகளில் சுமார் 230 வெளிநாட்டு ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையத்தில் ஒன்றுகூடி MWC அமைப்பிடம் உதவி கேட்டனர்.

ஊழியர்களை மட்டும் நம்பியுள்ள குடும்பம்

அதில் பெரும்பாலானோரின் குடும்பம் ஊழியர்களின் உழைப்பை மட்டுமே நம்பி உள்ளது, அவர்களில் உடனடி உதவி தேவைப்படும் 90 பேருக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுத்து வருவதாக MWC அமைப்பின் செயல்பாட்டு உதவி இயக்குநர் சேவியர் ஜோசப் கூறியுள்ளார்.

மேலும் மனிதவள அமைச்சகத்துடன் இணைந்து ஊழியர்களுக்கு தங்கும் வசதிகளை அமைத்து தரவும் MWC ஏற்பாடு செய்து வருகிறது.

நிறுவனங்களிடம் இருந்து சம்பளம் பெறமுடியாமல் இருக்கும் ஊழியர்களுக்கு, MWC இன் தொண்டூழிய அமைப்பான Migrant workers assistance fund மூலம் குறிப்பிட்ட அளவு தொகை வழங்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் முன்வர வேண்டும்

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் விரைவாக முன்வந்து உதவி கோருமாறும், எவ்வளவு விரைவாக வருகிறார்களோ அவ்வளவு விரைவாக எங்களால் உதவியை வழங்க முடியும் என்று MWC வலியுறுத்தியுள்ளது.

மேலும் புதிய வேலை கிடைக்காதவர்கள் சொந்த நாடுகளுக்கே திரும்பி செல்லும் சூழல் ஏற்படலாம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

ஊழியர்களுக்கு சம்பளம் நிலுவை, ஓவர்டைம் போன்றவை குறித்த புகார்கள் பதிவு செய்யவும், புதிய வேலை தேடவும், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்கவும் MWC அமைப்பு உதவி வருகிறது.

“சம்பளம் வரல” – 5 ஊழியர்கள் புகார்: விசாரணையை தொடங்கிய MOM

தமிழ் ஊழியர்கள் பலருக்கு சம்பளம் பாக்கி: திவால் process-ல் பணம் செட்டில்மெண்ட் செய்யப்படுமா?

11 வினாடி தாமதம்.. சம்பளத்தில் $5 பிடித்தம்: சிங்கப்பூரில் சம்பளம் தொடர்பான விதிகள் என்ன?

இதுபோன்ற வெளிநாட்டு ஊழியர்களின் செய்திகளை துல்லியமாக தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.