சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர், வேலைக்கு 11 வினாடி தாமதமாக வந்ததால் அவரின் சம்பளத்தில் இருந்து $5 பிடித்தம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மனிதவள அமைச்சகம் (MOM) தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
சாங்கி விமான நிலையத்தில் பயணிகளுக்கு சக்கர நாற்காலி சேவை வழங்கும் வேலையை அவர் பார்த்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.
அவர் வேலை செய்யும் Aventa Services நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ள MOM, சம்பளம் பிடித்தம் தொடர்பான காரணம் மற்றும் அளவு குறித்து விளக்கம் கேட்டுள்ளது.
சம்பளம் தொடர்பான விதிகள் என்ன?
மனிதவள ஒழுங்குமுறை விதிகளின்படி, ஊழியர் வேலைக்கு வராத நேரத்திற்கு சம்பளத்தை பிடித்தம் செய்ய முதலாளிகளுக்கு உரிமை உண்டு.
ஆனால், அந்த பிடித்தம் என்பது ஊழியர் வேலைக்கு வராமல் இருந்த காலத்துக்கான சம்பளத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது.
உதாரணத்திற்கு; ஊழியர் ஒருவர் 30 நிமிடம் தாமதமாக வந்தார் என்று எடுத்துக்கொண்டால், அந்த 30 நிமிடத்துக்கான சம்பளத்தை மட்டுமே கழிக்க வேண்டும்.
11 விநாடிக்கு S$5 கழித்தால்??
11 விநாடிக்கு S$5 பிடித்தம் என்றால், 1 மணிநேரத்துக்கு S$1,636 சம்பளமா? அதே போல, ஒரு நாளுக்கு (8 மணி நேரத்துக்கு) S$13,091 சம்பளம் கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதன்மூலமாக, சம்பளத்தில் 11 விநாடிக்கு S$5 பிடித்தம் செய்யப்படுவது என்பது நியாயமான நடைமுறையாக இருக்க முடியாது.
MOM எச்சரிக்கை
முதலாளிகள் தங்களிடம் வேலை செய்யும் ஊழியர்களிடம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று MOM கேட்டுக்கொண்டுள்ளது.
வேலைவாய்ப்பு சட்டத்தின்படி (Employment Act) அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
மேலும், Fine அல்லது penalty என கூறி செய்யப்படும் முறையற்ற பிடித்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அது திட்டவட்டமாக கூறியது.
முதலாளிகள் மீது தண்டனை விதிக்கப்படலாம்
சட்டத்திற்கு புறம்பாக அல்லது அதிகப்படியான தொகைகளை சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்வது, வேலைவாய்ப்பு சட்டத்தின்படி “சம்பளம் கொடுக்க தவறிய” குற்றமாக எடுத்துக்கொள்ளப்படும்.
குற்றம் நிரூபணமானால், முதலாளிகள் மீது கடும் நடவடிக்கை கூட எடுக்கப்படலாம்.
ஊழியர்கள் எங்கு புகார் சொல்வது?
அவ்வாறு விதிகள் மீறி சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டால் ஊழியர்கள் எங்கு புகார் சொல்வது என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கும், இதற்கான தெளிவையும் MOM நமக்கு கொடுத்துள்ளது.
பாதிக்கப்படும் ஊழியர்கள், Tripartite Alliance for Dispute Management (TADM) என்ற அமைப்பிடம் புகார் தெரிவிக்கலாம்.
அந்த அமைப்பு இழந்த சம்பளத்தை மீட்டு தர ஊழியர்களுக்கு உதவி செய்யும்.
சிங்கப்பூர் தமிழ் வெளிநாட்டு ஊழியர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்திருங்கள். (குறிப்பு: முக்கிய தகவல்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்)