தமிழ் ஊழியர்கள் பலருக்கு சம்பளம் பாக்கி: திவால் process-ல் பணம் செட்டில்மெண்ட் செய்யப்படுமா?

Published: 23 Aug 2026, 4:22 PM |

சிங்கப்பூரில் தமிழ் ஊழியர்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாதா விவகாரத்தில் தொடர்புடைய நிறுவனங்களின் இயக்குநரான ராமு பழனிவேலு திவாலானவராக (bankrupt) அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஏர்-கண்டிஷனிங், பிளம்பிங் மற்றும் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட 7 நிறுவனங்களின் இயக்குநர் என்பது கூடுதல் தகவல்.

இந்திய நாட்டை சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தரவாசியான (PR) ராமுவுக்கு ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அவரின் KPA இன்ஜினியரிங், SK இண்டஸ்ட்ரீஸ் மற்றும் VVR பிளான்ட் இன்ஜினியரிங் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த 407 ஊழியர்கள் சம்பளம் வழங்கப்படவில்லை என்று புகார் அளித்தனர், அதில் சில ஊழியர்களுக்கு 2 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வரவில்லையாம்.

சம்பளம் கிடைக்கவில்லை என்று 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் கடந்த ஜூன் 22 அன்று மனிதவள அமைச்சகத்தின் (MOM) அலுவலத்தை நோக்கி உதவி வேண்டி சென்றனர். அதற்கு முன்பாகவே MOM விசாரணையை தொடங்கியதாக குறிப்பிட்டது.

சம்பளம் கொடுக்கப்படவில்லை என்ற செய்திகள் பரவிய நிலையில், ராமு வெளிநாட்டில் இருந்ததாகவும் பின்னர் ஜூன் 26 அன்று நாடு திரும்பிய ராமு, MOM விசாரணைக்கு ஒத்துழைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, திவால் நிலைக்கு ஜூலை 9 அன்று அவர் விண்ணப்பித்தார். பின்னர் அவருக்கு திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அறங்காவலராக (trustee) AAG கார்பரேட் அட்வைசரி நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டம்

சம்பளம் கொடுக்கத் தவறும் முதலாளிகளுக்கு S$3,000 முதல் S$15,000 வரை அபராதமும், அதிகபட்சம் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

எங்கு உதவி கோரலாம்?

சம்பளம் தொடர்பாக பாதிக்கப்படும் ஊழியர்கள், Tripartite Alliance for Dispute Management (TADM) என்ற அமைப்பிடம் புகார் தெரிவிக்கலாம்.

அந்த அமைப்பு இழந்த சம்பளத்தை மீட்டு தர உதவி செய்யும்.

“திவால்” (Bankruptcy) என்றால் என்ன?

ஒருவர் தனக்கு இருக்கும் கடன்களை அடைக்க முடியாத நிலையே “திவால்” (Bankruptcy) என்று சொல்லப்படுகிறது.

அவ்வாறு திவாலாகி போனவரின் சொத்துக்கள் மற்றும் நிதி விவகாரங்கள் trustee நியமிக்கப்பட்டு அவர்களின் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்படும்.

அவரின் சொத்துக்களை பயன்படுத்தி கடனாளர்களுக்கு கடனை திருப்பிக்கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திவால் ஆனதால் கடன்/பொறுப்புகள் அழிந்துவிட்டதாக பொருள் கிடையாது.

இந்த வழக்கில் ஊழியர்கள் insolvency process என்னும் திவால் நடவடிக்கை மூலம் சம்பள பாக்கியை பெற கோரிக்கை வைக்கலாம்.

அவரின் சொத்துக்கள் மற்றும் நிதிகளை பொறுத்து ஊழியர்களின் சம்பளம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது.

கூடுதல் தகவல்களை பெற தொடர்ந்து இணைப்பில் இருங்கள்…

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.