சிங்கப்பூரில் இயங்கி வரும் Korea Artiz Studio நிறுவனத்தில் பணிபுரியும் 5 ஊழியர்கள் தங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று புகார் அளித்ததை தொடர்ந்து, நிறுவனத்துக்கு எதிராக மனிதவள அமைச்சகம் (MOM) தற்போது விசாரணையை தொடங்கியுள்ளது.
9 நாட்களில் அதாவது ஆக.10 மற்றும் ஆக 18 வரை, சம்பள பாக்கி தொடர்பாக 5 ஊழியர்கள் புகார் தெரிவித்ததாக MOM கூறியுள்ளது.
சம்பளம் தொடர்பான பிரச்சனைகளை விசாரிக்கும் Tripartite Alliance for Dispute Management (TADM) அமைப்பு, நிறுவனத்துக்கும் அந்த ஊழியர்களுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தையை நடத்த ஏற்பாடு செய்வதாக சொல்லப்பட்டுள்ளது.
அதேபோல, 2026 ஜூலை மாதம் வழங்கப்பட வேண்டிய CPF பங்களிப்பு தொகையும் கொடுக்கப்படவில்லை என்று CPF அமைப்பு கண்டறிந்துள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊழியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாக MOM, CPF அமைப்பு மற்றும் TADM அமைப்பு ஆகியவை கூறியுள்ளன.
ஊழியர்களுக்கு முறையாக சம்பளத்தை சரியான நேரத்தில் வழங்குவது ஒவ்வொரு முதலாளியின் கடமை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திடீரென மூடப்பட்ட நிறுவனம்
கடந்த ஆக.19 அன்று, அந்நிறுவனம் திடீரென நிறுவன செயல்பாடுகளை நிறுத்தியதாக சொல்லப்பட்டுள்ளது.
Bras Basah ரோட்டில் அமைத்துள்ள அந்நிறுவனம், “நிர்வாக பிரச்சனை காரணமாக செயல்பாடுகளை நிறுத்துவதாகவும், மேலும் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும், நிர்வாகத்திடம் இருந்து தெளிவான பதில் இல்லை” என்றும் வாசலில் ஒட்டியிருந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் அதன் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக.14 முதல் 18 வரை வாடிக்கையாளர்களிடமிருந்து சுமார் 66 புகார்கள் வந்துள்ளதாகவும், இதில் S$271,000-க்கும் அதிகமான முன்பணம் அவர்கள் பெற்றுள்ளதாகவும் சிங்கப்பூர் நுகர்வோர் aமைப்பு (CASE) தெரிவித்துள்ளது.
ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றால் TADM அமைப்பு மூலமாக புகார் அளிக்க முடியும்.
சிங்கப்பூரில் முன்னர் நடந்த இதேபோன்ற ஒரு சம்பவத்தில், தமிழ் ஊழியர்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாதா விவகாரத்தில் தொடர்புடைய நிறுவனங்களின் இயக்குநரார் திவாலானவராக (bankrupt) அறிவிக்கப்பட்டார்.