TOTO ஜாக்பாட்: S$12.1 மில்லியன் முதல் பரிசை தட்டித் தூக்கிய இருவர்!

Published: 10 Nov 2026, 2:04 AM |
toto-winners-9-nov

சிங்கப்பூர் TOTO கேஸ்கேட் ஜாக்பாட் குலுக்களின் பிரம்மாண்ட முதல் பரிசான S$12.1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இருவர் தட்டிச் சென்றனர். அவர்களுக்கு தலா $6 மில்லியன் பங்கு கிடைக்கும்.

நேற்று நவ.9 அன்று நடந்த இந்த கேஸ்கேட் குலுக்கலின் குரூப் 1 முதல் பரிசுத் தொகை S$12,198,558 என்ற பிரம்மாண்ட இலக்கை எட்டியது.

இந்த குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்: 5 27 29 38 40 43 மேலும் கூடுதல் எண் 4 ஆகும்.

Singapore Pools

வெற்றி பெற்ற டிக்கெட்டுகள் இரண்டுமே இணையத்தில் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒன்று QuickPick System 7 Entry முறையிலும் இன்னொன்று QuickPick Ordinary Entry முறையிலும் வாங்கப்பட்டது.

இரண்டாம் பரிசை 12 பேர் வென்றனர், அவர்களுக்கு தலா $115,990 கிடைக்கும் என Singapore pools தளத்தின் தரவுகள் காட்டுகின்றன.

மேலும் மூன்றாம் பரிசை 503 பேர் வென்றுள்ளனர், மேலும் வெறும் 10 வெள்ளி பரிசை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வென்றுள்ளனர்.

கடைசியாக நடந்த 3 TOTO குலுக்கலிலும் முதல் பரிசை யாரும் வெல்லவில்லை என்பதால் அதன் பரிசுத் தொகை படிப்படியாக அதிகரித்து S$12 மில்லியனை தாண்டியது.

அதாவது, அக்டோபர் 29, நவம்பர் 2 மற்றும் நவம்பர் 5 ஆம் தேதிகளில் நடந்த குலுக்கலில் முதல் பரிசை யாரும் வெல்லவில்லை.

2026-ல் மட்டும் 5வது முறையாக TOTO கேஸ்கேட் பரிசுத் தொகை S$10 மில்லியனை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TOTO ஜாக்பாட்: S$10 மில்லியன் பிரம்மாண்ட பரிசு – வெல்லப்போவது யார்?

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.