தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவச பேருந்து சேவை மற்றும் அன்பளிப்பு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான தொண்டூழிய அமைப்பான ItsRainingRaincoats (IRR) மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த ஏற்பாடுகளை செய்து அன்பளிப்புகளை வழங்கினர்.
இலவச பேருந்துகள்
துவாஸ் மற்றும் ஜூரோங் தீவு பகுதிகளில் இருந்து நேரடியாக லிட்டில் இந்தியாவுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்பட்டன.
எந்தவித நேர விரையமும் இன்றி வெளிநாட்டு ஊழியர்கள் ஒரு மணிநேரத்துக்குள் லிட்டில் இந்தியா சென்றதாக IRR தெரிவித்துள்ளது.

அதேபோல, மீண்டும் திரும்பிய பேருந்து நேரடியாக அவர்களின் தங்கும் விடுதி வாசலுக்கே சென்றது.
இதனால் வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களின் நண்பர்களுடன் ஓய்வெடுக்கவும், அவர்களின் வேலைகளை செய்யவும்,மேலும் வீட்டுக்கு பணம் அனுப்பவும் உதவியதாக அது கூறியது.
இதுக்கு ஆதரவளித்த Grifol Biopharma Asia-Pacific நிறுவனத்துக்கும் தன்னார்வலர் பிரபு என்பவருக்கும் IRR அமைப்பு நன்றி தெரிவித்தது.
அன்பளிப்பு பொட்டலங்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு அன்பளிப்பு பொட்டலங்களும் வழங்கப்பட்டது.
மொத்தம் 325 ஊழியர்களுக்கு அன்பளிப்பு பொட்டலங்கள் வழங்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்திய ஊழியரின் வேலை அனுமதி (Work Permit) அட்டை கண்டெடுப்பு!
இதுபோன்ற வெளிநாட்டு ஊழியர்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சிங்கப்பூர் செய்திகள் உடன் இணைப்பில் இருங்கள்…