வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தளர்வு: 2027 ஜன.1 முதல்

Published: 11 Nov 2026, 2:56 AM |
Migrant Worker Dormitory ease rules 2027

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் (Migrant dormitory) படுக்கைகளின் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், வரும் 2027 ஜனவரி 1 முதல் விடுதிகளில் தற்காலிகத் தளர்வுகளை மனிதவள அமைச்சகம் (MOM) கடந்த நவ.6 அன்று அறிவித்தது.

இதன் காரணமாக தங்கும் விடுதி அறைகளில் ஊழியர்களின் படுக்கை எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் மேலும் ஒருவருக்காக வழங்கப்பட்ட இட அளவு குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய விதிகள்

தற்போதைய NDS (New Dormitory Standards) விதிகளின் படி, ஒருவருக்கான இட அளவு 4.2 சதுர மீட்டர் இருக்க வேண்டும், ஒரு அறையில் அதிகபட்சம் 12 பேர் வரை தங்கலாம், மேலும் படுக்கைகளுக்கு இடையேயான இடைவெளி குறைந்தது 1 மீட்டர் இருக்க வேண்டும்.

2027 ஜன.1 முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ள மாற்றங்கள்

2027 ஜன.1 முதல் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக தரளர்வுகளின்கீழ், ஒருவருக்கான இட அளவு 3.6 சதுர மீட்டராக குறைக்கவும், ஓர் அறையில் 14 பேர் வரை தங்கவைக்கவும், 1 மீட்டர் கட்டாயம் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் விடுதி நடத்துநர்கள் விருப்பத்தின் பேரில் விண்ணப்பிக்கலாம் என்றும் MOM கூறியுள்ளது.

இந்த தற்காலிக தளர்வுகள் 2027 ஜன.1 முதல் – 2030 ஜன.31 வரை மட்டுமே நடப்பில் இருக்கும். அதற்கு பின்னர் மீண்டும் NDS அமலுக்கு வந்துவிடும்.

குறுகிய-கால தங்கும் விடுதிகளுக்கு (Short-term dormitories) என்ன மாற்றம்?

2040 ஆம் ஆண்டுக்கு முன்னரே செயல்பாட்டை நிறுத்தும் குறுகிய-கால தங்கும் விடுதிகளான தற்காலிக கட்டுமான இருப்பிடங்கள் (Construction Temporary Quarters), தற்காலிக உரிமம் பெற்ற விடுதிகள் (Temporary Occupation Licence Quarters) மற்றும் விரைவு தங்கும் விடுதிகள் (Quick Build Dormitories) ஆகியவைக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவைகள் பழைய “தங்கும் விடுதிகள் இடமாற்றத் திட்டத்தின்கீழ்” (Dormitory Transition Scheme – DTS) கட்ட அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DTS விதிகளின் படி, ஒருவருக்கு 3.6 ச.மீ இடம், அறைக்கு அதிகபட்சம் 12 பேர் மற்றும் இடைவெளி 1 மீட்டர் இருக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், 2040 ஆம் ஆண்டுக்கு பிறகு இயங்க திட்டமிடும் இவ்வகை தங்கும் விடுதிகள் NDS தரத்தை பின்பற்றியே கட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோக்கம்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு போதுமான படுக்கை வசதிகளை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம் என MOM கூறியுள்ளது.

முக்கிய குறிப்பு

இந்த தளர்வுகள் கட்டாயமல்ல, விருப்பத்தின் பேரில் மட்டுமே இது செயல்படும்.

விடுதி நடத்துநர்கள் (Operators) முதலில் சம்மந்தப்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளிடமும், பின்னர் மனிதவள அமைச்சகத்திடமும் (MOM) இதற்காக வேண்டி ஒப்புதல் பெற வேண்டும்.

ஒப்புதல் வழங்கப்பட்ட விடுதிகளுக்கு மட்டுமே இந்த தற்காலிக மாற்றங்கள் நடப்புக்கு வரும்.

சிங்கப்பூர் Work Permit-ல் முக்கிய மாற்றம்: செப்.1 முதல் இந்தியர்களுக்கு 8 புதிய வேலை வாய்ப்புகள்

சிங்கப்பூர் S Pass புதிய விதிகள் 2026: செப்.1 முதல் சம்பளம் மாற்றம்

வெளிநாட்டு ஊழியர்களின் முக்கிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் நம்ம சிங்கை தமிழ் செய்தியுடன் இணைப்பில் இருங்கள்…

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.