இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் NTS ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதியின்கீழ் இன்று செப்.1 முதல் கூடுதலாக சில வேலைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
NTS என்னும் Non-Traditional Sources வேலை பட்டியலை மனிதவள அமைச்சகம் (MOM) விரிவுப்படுத்துகிறது.
இதனால் இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, மியான்மர் உள்ளிட்ட NTS நாடுகளைச் சேர்ந்த ஒர்க் பெர்மிட் ஊழியர்களுக்கான வேலைகளும் விரிவடைகிறது.
இந்த புதிய மாற்றத்தின்கீழ், உணவுத் துறை, விமானப் போக்குவரத்து மற்றும் சமூக சேவை துறைகளில் ஒர்க் பெர்மிட் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த முடியும்.
செப்.1 முதல் NTS-ல் சேர்க்கப்பட்ட 8 வேலைவாய்ப்புகள்
- இறைச்சி வெட்டுபவர் / மீன் விற்பனையாளர்கள்/ உணவு தயாரிப்பவர்கள்
- உணவு / பானக் கடை உதவியாளர்கள்
- சமையலறை உதவியாளர்கள்
- உணவு பரிமாறுபவர்கள் / பணியாளர்கள் (Waiters)
- விமான கேபின் உதவியாளர்கள்
- குழந்தை பராமரிப்பாளர்கள் / கைக்குழந்தை பராமரிப்பாளர்கள் (Babysitters / Infant Caregivers)
- ஆரம்பக் கல்வி உதவியாளர்கள் (Educarers)
- ஆசிரியர் உதவியாளர்கள் (Teacher Aides)
இந்தியர்களும் இந்த NTS பட்டியலில் இருப்பதால் மேற்கண்ட வேலைகள் கிடைப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
ஆனால் வேலைக்கு எடுக்கும் முதலாளி குறிப்பிட்ட துறை சார்ந்த தேவைகள், ஒதுக்கீடு மற்றும் பிற MOM நிபந்தனைகளை பூர்த்தி செய்வது கட்டாயமாகும்.
இந்த மாற்றத்தினால் மேற்கண்ட துறைகளில் இனி இந்திய ஊழியர்களை ஒர்க் பெர்மிட்டின்கீழ் முதலாளிகள் வேலைக்கு எடுக்க முடியும்.
NTS பட்டியலின்கீழ் பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச கட்டாய சம்பளமாக S$2,000 வழங்க வேண்டும் என்றும் MOM தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்கள் அப்டேட் செய்யப்படும். இணைப்பில் இருங்கள்…