சிங்கப்பூர் S Pass புதிய விதிகள் 2026: செப்.1 முதல் சம்பளம் மாற்றம்

Published: 30 Aug 2026, 6:54 PM |

சிங்கப்பூரில் செப்.1, 2026 முதல் காலாவதியாகும் S Pass அனுமதி புதுப்பிப்புகளுக்கு குறைந்தபட்ச தகுதி சம்பளம் (minimum qualifying salary) S$3,300 -ஆக உயருகிறது.

S Pass அனுமதியின்கீழ் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச தகுதி சம்பளத்தை சிங்கப்பூர் படிப்படியாக உயர்த்தி வருகிறது.

அதன் அடிப்படையில், வயது அதிகரிக்க அதிகரிக்க குறைந்தபட்ச தகுதி சம்பளமும் அதிகரிக்கும். அதாவது 45 வயது அல்லது அதற்கு மேல் உள்ள S Pass ஊழியர்களுக்கு S$4,800 வரை சம்பளம் உயரும் என MOM குறிப்பிட்டுள்ளது.

நிதித்துறையை பொறுத்தவரை செப்.1, 2026 முதல் குறைந்தபட்ச தகுதி சம்பளம் S$3,800 ஆக அதிகரிக்கிறது, வயதுக்கு ஏற்ப இது S$5,650 வரை அதிகரிக்கும்.

2027 ஜனவரி முதல்

2027 ஜனவரி முதல் புதிய S Pass விண்ணப்பங்களுக்கு குறைந்தபட்ச தகுதி சம்பளம் S$3,600 ஆக அதிகரிக்கிறது. 45 வயது அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்கு S$5,100 வரை அதிகரிக்கும்.

நிதித்துறையை பொறுத்தவரை குறைந்தபட்ச தகுதி சம்பளம் S$4,000 ஆக அதிகரிக்கிறது, வயதுக்கு ஏற்ப இது S$5,650 வரை அதிகரிக்கும்.

அதேபோல, 2028 ஜனவரி 1 முதல் புதுப்பிப்பு செய்யப்படும் S Pass அனுமதிகளுக்கு மேற்கண்ட சம்பளம் பொருந்தும்.

சிங்கப்பூரில் வெயிலில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டாய விதிகளை MOM அறிவித்துள்ளது. மீறினால் தண்டனை விதிக்கப்படலாம்.

மேலும் அறிவிப்புகள் புதுப்பிப்பு செய்யப்படும். சிங்கப்பூர் செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.