லிட்டில் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம்: காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

Published: 7 Nov 2026, 1:54 AM |
Little India over crowds-deepavali

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதற்கு முந்தைய நாளான இன்று (நவ.7) லிட்டில் இந்தியா பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாகவும் மேலும் போக்குவரத்து நெரிசலாகவும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்நேரத்தில், செராங்கூன் சாலையில் நடந்துசெல்வோர் எண்ணிக்கையும் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்படும் என சிங்கப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது.

மூடல்

அங்குலியா பள்ளிவாசல் முன்பகுதியில் உள்ள பிர்ச் ரோடு பாதசாரிகள் கடக்கும் பகுதி இன்று மாலை 4 மணி முதல் நாளை (நவம்பர் 8) அதிகாலை 4 மணி வரை மூடப்படும்.

அச்சமயம் மாற்று வழியாக கிச்சனர் லிங்க் அல்லது பாபு லேன் அருகில் இருக்கும் பாதசாரிகள் கடக்கும் பகுதிகளைப் பயன்படுத்தலாம்.

தேவைப்பட்டால் காம்ப்பெல் லேன் பாதசாரிகள் கடக்கும் பகுதியும் மூடப்படலாம் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அதற்கு மாற்றாக சுங்கே சாலை அல்லது டன்லப் ஸ்ட்ரீட் அருகே உள்ள கடக்கும் பகுதிகளைப் பயன்படுத்தலாம்.

பாதிக்கப்படும் இடங்களில் குறியீடு பலகைகள் வைக்கப்படும், மேலும் பாதசாரிகளுக்கு உதவவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் கூடுதல் துணை காவல்துறை அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள்.

மது அருந்தத் தடை

லிட்டில் இந்தியா மற்றும் கேலாங் ஆகிய இடங்கள் மது அருந்த தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது நவ.6ஆம் தேதி இரவு 10.30 முதல் நவ.10ஆம் தேதி காலை 7 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும்.

முதல் தடவை தவறிழைத்து சிக்கினால் S$1,500 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டால் S$3,000 வரை அபராதம் அல்லது 4.5 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி வெளியே மது விற்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படலாம்.

லிட்டில் இந்தியாவில் மதுக் கட்டுப்பாட்டு உள்ள பகுதிகள்:

SPF

சட்டவிரோத பட்டாசுகள்

பட்டாசுகளை வைத்திருப்பது, வெளியில் இருந்து இறக்குமதி செய்வது அல்லது வெடிப்பது சட்டப்படி குற்றமாகும்.

சிங்கப்பூர் சட்டத்தின் கீழ், பட்டாசுகள் வெடி பொருட்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் அவற்றை வெடிப்பது பிறரின் உடமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் S$50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

பாதுகாப்பு குறித்து காவல்துறை சொன்ன குறிப்புகள்

  • மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் உங்கள் உடைமைகளை கவனமுடன் பார்த்துக்கொள்ளுங்கள்
  • உங்களின் பைகளை நன்றாக மூடி உங்களின் முன்புறம் இருக்குமாறு அணிந்துகொள்ளுங்கள்
  • உங்களில் பர்ஸை பேண்டின் பின்பகுதியில் வைப்பதை தவிர்க்கவும்
  • அவசர உதவி தேவைப்பட்டால் அருகிலுள்ள காவல் அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது 999 அழைக்கவும்

துவாஸில் லாரி விபத்து: 20 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி

தொடர்ந்து அப்டேட் செய்யப்படும் தொடர்ந்து இணைப்பில் இருங்கள் சிங்கப்பூர் செய்திகள் உடன்…

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.