சுங்கை காடுட் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக உரிமமில்லா தங்கும் விடுதி நடத்தியதாக (illegal dormitory) கட்டுமான நிறுவனம் மற்றும் அதன் பொது மேலாளர் மீதும் இன்று வியாழக்கிழமை (அக்.29) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
58A சுங்கை காடுட் ரோட்டில் உள்ள LBD Engineering’s நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் மனிதவள அமைச்சகத்தின் (MOM) அதிகாரிகள் சோதனை நடத்தினர், அப்போது சுமார் 300 படுக்கைகள் அங்கு இருப்பது கண்டறியப்பட்டது.
173 வெளிநாட்டு ஊழியர்கள் தங்க வைப்பு
கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2026 ஜனவரி வரை, அந்த நிறுவனம் அதன் ஒரு பகுதி இடத்தை வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியாக மாற்றி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
அந்த இடங்களில் முறையான உரிமம் இல்லாமல், 4 நிறுவங்களை சேர்ந்த சுமார் 173 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கவைக்கப்பட்டு இருந்தனர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
இந்த நிலையில், வேண்டுமென்றே நிறுவனம் உரிமம் இல்லாத இடத்தில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியை நடத்தியதாக பொது மேலாளர் அல்வின் லிம் யீ ஹொங் (35) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், உரிமமில்லா தங்கும் விடுதியை இயக்கியதாக LBD Construction கட்டுமான நிறுவனத்தின் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தண்டனை
இதுபோன்ற குற்றங்களுக்கு அதிகபட்சமாக S$500,000 வெள்ளி வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
MOM நிலைப்பாடு
இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் தங்கும் விடுதிகளை தீவீரமாக பார்ப்பதாக MOM கூறியது.
அதற்கான உரிமங்கள் வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே அமைக்கப்பட்டுள்ளன என்பதை அது சுட்டிக்காட்டியது.
மாறாக உரிமமின்றி நடத்தப்படும் ஊழியர் விடுதிகளால் அதன் பாதுகாப்பு கேள்வி குறியாக்கப்பட்டு ஆபத்தில் முடியக்கூடும் என்பதையும் அது கூறியது.
இதுபோன்ற சந்தேகத்திற்குரிய சட்டத்திற்கு புறம்பான வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் நடத்தப்பட்டால் புகாரளிக்கலாம் என MOM கூறியுள்ளது.
புகார் அளிக்க – “Report an Infringement”
வெளிநாட்டு ஊழியர் Quota மோசடி – 21 பேரிடம் MOM விசாரணை
9 வெளிநாட்டு ஊழியர்களுக்கு முறைகேடாக Work Pass.. சிக்கியவருக்கு சிறை
இதுபோன்ற வெளிநாட்டு ஊழியர் செய்திகளை மட்டும் அறிந்துகொள்ள இணைந்திருங்கள் “சிங்கை தமிழ்” உடன்…