சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒதுக்கீட்டை முறைகேடாக அதிகரிக்க முயன்ற 4 பேர் கைதான நிலையில் மனிதவள அமைச்சகம் (MOM) அவர்களிடன் விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளது.
கட்டுமான துறையை சேர்ந்த இரு நிறுவன இயக்குநர்களும், இரு ஊழியர்களும் இதில் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.
“Phantom Worker” என்னும் போலி ஊழியர்கள் மோசடி
நிறுவனம் தங்களிடம் உண்மையாகவே வேலை செய்யாத உள்ளூர் ஊழியர்களை கணக்கு காட்டி அவர்களின் பெயரில் CPF சேமநிதி பங்களிப்புகளை செலுத்துவது Phantom Worker என்னும் போலி ஊழியர்கள் என்று பொருள்படும்.
இவ்வாறு உள்ளூர் ஊழியர்களை அதிகமாக கணக்கு காட்டும் நிறுவனம், வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒதுக்கீட்டை (foreign worker quota) அதிகரிக்க முயற்சி செய்கிறது.
அவ்வாறு மோசடியாக அதிகரிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டை வைத்து கூடுதலாக ஒர்க் பாஸ் அனுமதிகளை விண்ணப்பித்து வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டுக்குள் அழைத்துவரப்படுவதாக MOM தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் 21 பேர் விசாரணைக்கு உதவுதாக MOM கூறியுள்ளது.
கடும் தண்டனை
மோசடியாக வேலை அனுமதி விண்ணப்பங்களில் தவறான தகவல்களை கொடுத்தது நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக S$20,000 வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிறுவனம் அல்லது நபர்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க தடை விதிக்கப்படலாம்.
அதேபோல, kickback என்னும் லஞ்ச பணம் பெற்றது நிரூபிக்கப்பட்டால், S$30,000 வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இதற்கு முன்னர் சிங்கப்பூரில் 9 வெளிநாட்டு ஊழியர்களுக்கு முறைகேடாக ஒர்க் பாஸ் (Work Pass) பெற அனுமதித்த நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
MOM தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள “சிங்கப்பூர் செய்திகள்” உடன் இணைப்பில் இருங்கள்..