9 வெளிநாட்டு ஊழியர்களுக்கு முறைகேடாக Work Pass.. சிக்கியவருக்கு சிறை

Published: 1 Sep 2026, 2:06 PM |
Jail

தனது சக ஊழியரை தாக்கி மூலையில் பாதிப்பு ஏற்படுத்தி, 9 வெளிநாட்டு ஊழியர்களுக்கு முறைகேடாக ஒர்க் பாஸ் (Work Pass) பெற அனுமதித்த தொடர் குற்றவாளிக்கு மீண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

முஹம்மது அட்லி அம்ரன் (31) என்ற அவருக்கு நேற்று (ஆக.31) 9 மாதங்கள் மற்றும் 22 வாரங்கள் சிறைத் தண்டையும் S$1,200 அபராதமும் விதிக்கப்பட்டது.

பல்வேறு குற்றங்களில் அடிக்கடி சிறைக்கு சென்று வரும் அட்லி, கோல்மன் ஸ்ட்ரீட்டில் உள்ள நைட் ஸ்பாட் விடுதியில் பௌன்ஸராக வேலை செய்தார்.

கடந்த 2025 மே 3 அன்று, விடுதியில் ஏற்பட்ட தகராறில் அதன் மேலாளர் அட்லியை கண்டித்துள்ளார். இது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட வழிவகுத்தது.

இருவரும் மதுபோதையில் இருந்த நிலையில், அட்லி அவரின் முகத்தில் குத்துவிட்டார், இதில் அவர் கீழே விழுந்து கண்ணாடி மீது மோதியதாக சொல்லப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட அவருக்கு மூலையில் கடும் காயம் ஏற்பட்டதாகவும், மேலும் வாசனை உணரும் திறனை அவர் இழந்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர், அட்லி கைது செய்யப்பட்டார். இதனுடன் சேர்த்து நான்காவது முறையாக வன்முறை தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் குற்றம் ஒருபுறம் இருந்தாலும் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின்கீழ் (mployment of Foreign Manpower Act) ஒரு குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.

ஒர்க் பாஸ் (Work Pass) முறைகேடு

Chira King என்ற பெயரில் நிறுவனத்தை பதிவு செய்த அட்லி, அவரின் சிங்பாஸ் (Singpass) மற்றும் கார்பாஸ் (Corppass) தகவல்களை மற்றவர்கள் பயன்படுத்த வழிவகுத்தார்.

இந்த கார்பாஸ் அனுமதியை பயன்படுத்தி மனிதவள அமைச்சகத்திடம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒர்க் பாஸ் அனுமதி பெற விண்ணப்பிக்க முடியும்.

2024 பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரை, அந்நிறுவனத்துக்காக 9 வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒர்க் பாஸ் அனுமதிகள் பெறப்பட்டன, ஆனால் அவர்கள் யாரும் அந்நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என்பது கூடுதல் தகவல்.

அவர்கள் எங்கு வேலை செய்தார்கள் என்பதே அட்லிக்கு தெரியவில்லை, மற்றவர்களுக்கு வாட்சப் QR கோடுகளை scan செய்தும், OTP-களை கொடுத்தும் ஒர்க் பாஸ் பெற அவர் வழிவகை செய்துள்ளார்.

இதன்மூலமாக மற்றவர்கள் அவரின் சிங்பாஸ் மற்றும் கார்பாஸ் தகவல்களை பயன்படுத்த அவர் அனுமதித்துள்ளார்.

இதற்கு சலுகை கட்டணமாக, 2023 இல் பாதி முதல் 2024 ஜூலை வரை மற்றவர்களிடமிருந்து மாதம் S$100 ரொக்கமாக பெற்றுள்ளார் அட்லி. இவை அனைத்தும் நீதிமன்றத்தில் அம்பலமானது.

வெளிநாட்டு ஊழியர்கள், ஒர்க் பாஸ் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள எங்களின் வாட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்…

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.