சிங்கப்பூரில் வேலை செய்யும் பணிப்பெண் ஒருவர் கத்தியுடன் தன்னை தானே வீட்டுக்குள் வைத்து பூட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் 2 மணிநேரம் போராடிய காவல்துறையினர் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.
கிளமெண்டியில் உள்ள வெஸ்ட் ஸ்ட்ரீட் 2, புளோக் 731-ல் கடந்த நவ.12 அன்று இரவு 7.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
மாலை 5 மணிக்கே அங்கு காவல்துறையினர் வந்ததாகவும், சம்பவத்தின்போது அந்த வீட்டில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டதாகவும் பக்கத்துக்கு வீட்டுக்காரர் கூறியதாக ஷின் மின் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
வீட்டில் கணவன், மனைவி மற்றும் ஆரம்ப பள்ளி படிக்கும் பிள்ளைகள் இருப்பதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதால் அவரை பார்த்துக்கொள்ள பணிப்பெண் வேலைக்கு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்த குடும்பம் அங்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதாகவும், முன்னர் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படும் என்றும் பலமுறை காவல்துறை அங்கு வந்துள்ளதாகவும் இன்னொரு பக்கத்துக்கு வீட்டுக்காரர் கூறினார்.
ஆனால், முதல் முறையாக சம்பவம் ரொம்ப தீவீரமாக மாறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக, சுமார் 2 மணிநேரம் போராடிய காவல்துறையினர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பில் பணிப்பெண்ணை கைது செய்து அழைத்து சென்றனர்.
விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
“Return Right” இயந்திரத்தில் மோசடி செய்த வெளிநாட்டு ஊழியர் – எச்சரித்த BCRS
PHOTO: SHIN MIN DAILY NEWS