சிங்கப்பூர் TOTO கேஸ்கேட் ஜாக்பாட் குலுக்களின் பிரம்மாண்ட முதல் பரிசான S$12.1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இருவர் தட்டிச் சென்றனர். அவர்களுக்கு தலா $6 மில்லியன் பங்கு கிடைக்கும்.
நேற்று நவ.9 அன்று நடந்த இந்த கேஸ்கேட் குலுக்கலின் குரூப் 1 முதல் பரிசுத் தொகை S$12,198,558 என்ற பிரம்மாண்ட இலக்கை எட்டியது.
இந்த குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்: 5 27 29 38 40 43 மேலும் கூடுதல் எண் 4 ஆகும்.

வெற்றி பெற்ற டிக்கெட்டுகள் இரண்டுமே இணையத்தில் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒன்று QuickPick System 7 Entry முறையிலும் இன்னொன்று QuickPick Ordinary Entry முறையிலும் வாங்கப்பட்டது.
இரண்டாம் பரிசை 12 பேர் வென்றனர், அவர்களுக்கு தலா $115,990 கிடைக்கும் என Singapore pools தளத்தின் தரவுகள் காட்டுகின்றன.
மேலும் மூன்றாம் பரிசை 503 பேர் வென்றுள்ளனர், மேலும் வெறும் 10 வெள்ளி பரிசை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வென்றுள்ளனர்.
கடைசியாக நடந்த 3 TOTO குலுக்கலிலும் முதல் பரிசை யாரும் வெல்லவில்லை என்பதால் அதன் பரிசுத் தொகை படிப்படியாக அதிகரித்து S$12 மில்லியனை தாண்டியது.
அதாவது, அக்டோபர் 29, நவம்பர் 2 மற்றும் நவம்பர் 5 ஆம் தேதிகளில் நடந்த குலுக்கலில் முதல் பரிசை யாரும் வெல்லவில்லை.
2026-ல் மட்டும் 5வது முறையாக TOTO கேஸ்கேட் பரிசுத் தொகை S$10 மில்லியனை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
TOTO ஜாக்பாட்: S$10 மில்லியன் பிரம்மாண்ட பரிசு – வெல்லப்போவது யார்?