சிங்கப்பூரில் TOTO கேஸ்கேட் ஜாக்பாட் குலுக்களின் முதல் பரிசுத் தொகை S$10 மில்லியன் என்ற பிரம்மாண்ட இலக்கை எட்டியுள்ளது. இந்த குலுக்கல் வரும் திங்கட்கிழமை (நவம்பர் 9) நடைபெறும் என்று Singapore Pools கூறியுள்ளது.
கடைசியாக நடந்த 3 TOTO குலுக்கலிலும் முதல் பரிசை யாரும் வெல்லவில்லை என்பதால் அதன் பரிசுத் தொகை படிப்படியாக அதிகரித்து தற்போது S$10 மில்லியனை எட்டியுள்ளது.
அதாவது, அக்டோபர் 29, நவம்பர் 2 மற்றும் நவம்பர் 5 ஆம் தேதிகளில் நடந்த குலுக்கலில் முதல் பரிசை யாரும் வெல்லவில்லை.
2026-ல் மட்டும் 5வது முறையாக TOTO கேஸ்கேட் பரிசுத் தொகை S$10 மில்லியனை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் கேஸ்கேட் குலுக்களிலும் முதல் பரிசை யாரும் வெல்லவில்லை என்றால், 2ஆம் இடங்களில் வருபவர்களுக்கு தொகை பிரித்து கொடுக்கப்படும்.
கடைசியாக ஜூலையில் நடந்த TOTO கேஸ்கேட் குலுக்கலில் S$12.8 மில்லியன் என்ற பிரம்மாண்ட முதல் பரிசை இருவர் தட்டிச் சென்றனர்.
TOTO லாட்டரி குறித்த தகவல்களை உடனே பெற சிங்கை தமிழ் வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்திருங்கள்…