சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா உள்ளிட்ட இடங்களில் சாலை விதிகளை மீறியும், தங்களின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாமலும் சாலையை கடந்த (Jaywalkers) பொதுமக்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் ஜீப்ரா கிராஸிங் வழிகள், சிக்னல் இருக்கும் இடங்கள், மேம்பாலங்கள் அல்லது சுரங்கப்பாதைகள் போன்றவற்றை பயன்படுத்துமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.
விதிகளை மீறிய சிலரை போக்குவரத்து காவல்துறை பிடித்து வைத்திருப்பதை புகைப்படங்கள் வாயிலாக காணமுடிகிறது.
அந்த புகைப்படங்கள், லிட்டில் இந்தியா மற்றும் மத்திய வர்த்தகப் பகுதியில் (CBD) உள்ள பார்க் ஸ்ட்ரீட் ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டன.

விதிகளை மீறி விரும்பிய இடங்களில் சாலையை கடக்கக் கூடாது என்றும், அவ்வாறு மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சாலை விதிமீறலில் ஈடுபடும் பாதசாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும் போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது.

விதிகள் கடுமை
சிங்கப்பூரில் ஜேவாக்கிங் (Jaywalking) எனப்படும் பொறுப்பற்ற சாலை கடப்புக்கு விதிமுறைகள் தற்போது கடுமையாக மாறியுள்ளன.
ஜேவாக்கிங் செய்யும் பாதசாரிகளுக்கு தற்போது S$50 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்படுகிறது.
பாதசாரிகள், சாலைகளை கடக்கும்போது அருகிலுள்ள Pedestrian crossing பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக போக்குவரத்து சிக்னல் உள்ள இடங்களில், பச்சை விளக்கு சிக்னல் போடப்பட்ட பின்னரே சாலையை கடக்க வேண்டும்.
கடந்த ஜூலை 13 அன்று, பூன் கெங் MRT அருகே போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் 10 பேர் பிடிபட்டனர், அவர்களுக்கு தலா S$50 அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் Jaywalking குற்றம்.. மீறினால் அபாரதம் – புதிதாக வருவோர் அறிந்துகொள்ள வேண்டியவை!
இதுபோன்ற முக்கிய தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…