“நாம் வீடுகளுக்குள் இருந்து குறை கூறும் நேரத்தில், நமக்காக வீடுகளை கட்டும் வெளிநாட்டு ஊழியர்கள்” – சிங்கப்பூரர் நெகிழ்ச்சி

Published: 17 Oct 2026, 2:26 PM |
construction-workers-amid-haze--build free food mask

சிங்கப்பூரில் புகைமூட்டம் நிலவி வரும் இந்த சூழலில் தெம்பனீஸ் பகுதியில் வெளிப்புறத்தில் வேலைபார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவச உணவு, பானங்கள் மற்றும் முகக்கவசங்களை வழங்கினார் டிக்டாக் பயனர் ஒருவர்.

இது குறித்து அவர் கூறுகையில், “நாம் வீடுகளுக்குள் இருந்து கொண்டு குறை கூறும் இவ்வேளையில், வெளிநாட்டு ஊழியர்கள் நமக்காக வீடுகளை கட்டிக்கொண்டு இருக்கின்றனர்” என்றார்.

கவலை

கடும் புகைமூட்டத்துக்கு மத்தியில், தன்னுடைய வீட்டுக்கு வெளியே உள்ள கட்டுமான தளத்தில் ஊழியர்கள் வேலைபார்ப்பதை கை எமிலியோ (Kai Emilio) என்ற 27 வயதுமிக்க டிக்டாக் கான்டன்ட் கிரியேட்டர் பார்த்து கவலையடைந்ததாக கூறினார்.

கவலையுடன் நிறுத்திக்கொள்ளாமல் தன் மனைவி மற்றும் நண்பர்களை அழைத்துக்கொண்டு இலவச உணவு, பானங்கள் மற்றும் முகக்கவசங்களை ஊழியர்களுக்கு அவர் வழங்கினார்.

சிங்கப்பூரை கட்டியெழுப்ப உறுதுணையாக இன்றளவும் இருந்துவரும் வெளிநாட்டு கட்டுமான ஊழியர்களுக்கு அவர் நன்றியை கூறிக்கொண்டார்.

ஊழியர்கள் வரிசையாக பெற்றுக்கொண்டதும், பின்னால் இருப்பவர்களுக்கும் பொருள்கள் கிடைக்கவேண்டும் என்றும் முன்வரிசையில் இருந்தவர்கள் குறைவாக எடுத்துக்கொண்டதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கை கூறினார்.

இதுபோன்று மீண்டும் உதவி செய்விங்களா? என்று ஊழியர் ஒருவர் கேள்வி எழுப்பினார், அதற்கு “என்னால் முடிந்தால் சற்றும் யோசிக்காமல் மில்லியன் தடவை செய்வேன்” என கை நெகிழ்ச்சியுடன் கூறினார்.

உணவு மற்றும் முகக்கவசங்களை பெற்றுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் மகிழ்ச்சியையும் மனமார்ந்த நன்றியையும் வெளிப்படுத்தினர்.

அதற்கு கையும் நன்றியை கூறி, “நீங்கள் இல்லையென்றால், சிங்கப்பூர் இல்லை” என்று வெளிநாட்டு ஊழியர்களை உற்சாகப்படுத்தினார்.

நெட்டிசன்கள் கருத்து

1 லட்சத்துக்கும் அதிக பார்வைகளை பெற்ற அந்த காணொளிக்கு இணையவாசிகள் பலர் பலவிதமான கருத்துக்களை கூறுகின்றனர்.

கையின் பொதுநல செயலுக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்தனர். இருப்பினும், சிலர் “இந்த இந்த சர்ஜிக்கல் மாஸ்க் புகைமூட்டத்துக்கு பயன்படாது” எனவும் கருத்து கூறினர்.

மேலும் “வெளிநாட்டு ஊழியர்கள் சார்பாக உங்களுக்கு நன்றியை கூறிக்கொள்கிறேன்” என்று ஒரு வெளிநாட்டு ஊழியர் கருத்து கூறினார்.

இதுபோன்ற வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்புடைய சிங்கப்பூர் செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

இரு ஊழியர்கள் வாக்குவாதம், சண்டை முயற்சி… “வேலை பறிபோகும்” – நெட்டிசன்கள் கருத்து

சிங்கப்பூருக்கு சுற்றுலா வந்த பயணி கண்ட விசித்திர சம்பவம்.. “கைமாறும் பணம்” “நேர்மையற்ற பரிமாற்றம்” – நெட்டிசன்கள் ஊகம்

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.