சிங்கப்பூர் HDB கார் நிறுத்துமிடத்தில் இரண்டு ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரைக்கொருவர் தாக்கிக் கொள்ள முயலும் காணொளி இணையத்தில் தீயாக பரவியது, மேலும் இருவர் அவர்களை தடுக்க முயல்வதையும் அதில் காண முடிந்தது.
கடந்த செப்.30 அன்று வெளியான இந்த காணொளி @sgfollowsall என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானது.
திறந்தவெளி HDB கார் நிறுத்துமிடத்தில் தள்ளுவண்டில் இருந்து பொருட்களை கமெர்சியல் வேன் ஒன்றில் ஏற்றும்போது இந்த சம்பவம் நடந்ததை காணொளியில் காணமுடிந்தது.
இரு ஊழியர்களும் ஒரே நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்பதை அவர்கள் அணிந்திருக்கும் டீ ஷர்ட்டை வைத்து அறிந்துகொள்ள முடிகிறது.
இரு ஊழியர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சத்தம் போடுகின்றனர், அதில் ஒருவர் ரொம்ப ஆக்ரோஷமாக சத்தம் போடுவதை காணமுடிந்தது. இருவரையும் சமாதானப்படுத்த ஒருவர் முயல்கிறார். மேலும் சைக்கிளில் வந்த 4வது நபர் ஒருவரும் ஊழியர்களை சமாதானப்படுத்த முயல்கிறார்.
“இருவரும் அமைதியாக இருங்கள்.., ஒருவருக்கொருவர் மதிப்பளியுங்கள்” என்று அவர்கள் கூறுவது புரிகிறது.
ஆனால், வாக்குவாதம் நின்றபாடில்லை. ஒருவர் தள்ளுவண்டியை பிடித்து வேனுக்குள் தூக்கி வீச, இன்னொரு ஊழியர் அவரை நோக்கி பாய இருவரும் காற்றில் கைகளை வீசி கொண்டு சண்டை போட முயன்றனர். நல்வாய்ப்பாக யாருக்கும் பெரிதாக அடி விழுந்த மாதிரி தெரியவில்லை.
சைக்கிளில் வந்த நபர் தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்த முயல்கிறார், பின்னர் ஒருவர் வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன் காணொளி முடிந்தது.
இந்த சம்பவம் எங்கே, எப்போது நடந்தது, மேலும் சண்டைக்கான காரணம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை.
அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்து யாரோ ஒருவர் இந்த காணொளியை எடுத்துள்ளார் என்பது தெரிகிறது, ஏனெனில் அவர் சிரிக்கும் சத்தம் காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் சற்றும் அசராமல் சண்டையை தடுக்க முயன்ற இருவரையும் நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டினர், எனக்கென்ன என்று சென்றுவிடாமல் பிடிவாதமாய் அவர்களின் சண்டையை கலைத்துவிட்ட அவர்களுக்கு பலர் நன்றியை தெரிவித்தனர்.
சிலர், “சண்டை மூண்டால் உங்களை காவல்துறை பிடிக்கும், வேலை பறிபோகும்.. பின்னர் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்படுவீர்..” என்று கருத்து கூறினர்.
சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்கள் செய்திகளை அறிந்துகொள்ள இணைந்திருங்கள்…