லிட்டில் இந்தியாவில் உள்ள கடையில் தீ: வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் நிர்வாகம்

Published: 26 Aug 2026, 12:58 PM |

லிட்டில் இந்தியாவின் ரேஸ் கோர்ஸ் ரோடு பகுதியில் உள்ள பேக்கரி கடையில் ஆகஸ்ட் 24ஆம் தேதி அன்று மாலை தீ ஏற்பட்டது.

ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள ஜே பெட்டிட் பேட்டிஸ்ஸரி (J Petite Patisserie) கடையில் ஏற்பட்ட தீ குறித்து அன்று மாலை 5.45 மணிவாக்கில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியுள்ளது.

கடையிலிருந்து கரும்புகை வெளியேறியதாகவும், அருகில் இருந்த ஸ்பா உள்ளிட்ட கடைகளில் இருந்து வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டதாகவும் Stomp செய்தி வெளியிட்டுள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த SCDF வீரர்கள், முதல் மாடி சமயலறையில் மூண்ட தீயை கண்டறிந்து தண்ணீர் பீச்சி அதை அணைத்தனர்.

அவர்கள் வருவதற்கு முன்பாகவே அந்த இடத்தில் இருந்து இருந்து மூவர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் பெரிய அளவில் ஏற்படவில்லை.

தற்காலிக மூடல்

சம்பவத்தை தொடர்ந்து ஜே பெட்டிட் பேட்டிஸ்ஸரி பேக்கரி கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களிடம் சிரமத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்ட கடை நிர்வாகம், முன்னர் ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு பேசி வருகிறது.

வாடிக்கையாளர்களின் ஆதரவு மற்றும் அன்பால் உருவான இந்த சிறிய இடம் இவ்வாறு பாதிக்கப்பட்டு இருப்பது மிகவும் வேதனையாக இருப்பதாக கடை நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும் இது விடைபெறுவதை குறிப்பது அல்ல என்று கூறிய நிர்வாகம், “மீண்டும் உங்களுக்காக கேக் தயார் செய்வோம்” என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தீ சம்பவத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

லிட்டில் இந்தியா தொடர்புடைய செய்திகள்:

லிட்டில் இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் உரிமம் இல்லாமல் மசாஜ் நிலையங்களை நடத்திய 26 வயதுடைய நபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தங்கும் விடுதிகளை சட்டவிரோதமாக வாடகைக்கு விடும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Photo: Stomp.sg

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.