சிங்கப்பூரில் சட்டவிரோத உணவு விநியோக வேலை பார்த்து வந்ததாக 2 வெளிநாட்டு ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக உணவு விநியோக வேலை பார்த்ததாகவும் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் 5 பேர் மீது நேற்று (நவ. 24) குற்றம் சாட்டப்பட்டது.
அவர்களின் 2 பேர் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் மூவர் சிங்கப்பூரர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள் சட்டவிரோத உணவு விநியோக வேலை செய்ய 3 சிங்கப்பூரர்களும் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதில் 35 வயதுமிக்க மலேசிய நாட்டை சேர்ந்த சான் சிகீன் (Chan Sikeen) மற்றும் 28 வயதுமிக்க சீன நாட்டை சேர்ந்த சாங் ஜியாகி (Zhang Jiaqi) ஆகியோர் முறையான செல்லுபடியாகும் வேலை அனுமதி இல்லாமல் உணவு விநியோக வேலை பார்த்ததாக கூறப்படுகிறது.
சிங்கப்பூரர்கள் பெயர்களில் பதிவான Deliveroo, GrabFood மற்றும் Foodpanda உள்ளிட்ட கணக்குகளைப் பயன்படுத்தி இருவரும் வேலை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
முறையான ஒர்க் பாஸ் அனுமதியின்றி சுயமாக வேலை செய்ததாக வெளிநாட்டவர் இருவர் மீது EFMA சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டன.
இதில் உடந்தையாக செயல்பட்டதாக எர்னஸ்ட் ஓங் (28), டான் டெக் லை (26), முஹம்மது ஸஃப்ரான் பின் முஹம்மது நஸீர் (35) ஆகிய 3 சிங்கப்பூரர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சட்டம்
EFMA சட்டத்தின் கீழ், முறையான ஒர்க் பாஸ் அனுமதியின்றி சுயமாக வேலை பார்க்கும் வெளிநாட்டவர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக செயல்படுவோர் மீதும் S$20,000 வரை அபராதம், 2 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
குற்றம் நிரூபிக்கப்படும் வெளிநாட்டவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்ய தடை விதிக்கப்படலாம்.
SIA விமான பணிப்பெண்ணிடம் சீண்டல்.. லிட்டில் இந்தியாவில் அமளியில் ஈடுபட்ட வெளிநாட்டு ஊழியருக்கு சிறை
சிங்கப்பூரில் உள்ளாடைகளை திருடிய வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை
வெளிநாட்டு ஊழியர்களுக்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பூர் செய்திகள் வாட்ஸ்ஆப் சேனலில் இணைந்திருங்கள்…