சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் உள்ள 15 கடைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அக்டோபர் 25 முதல் நவ. 7 வரை, லிட்டில் இந்தியாவில் உள்ள மது கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இந்த அதிரடி சோதனை நடந்தது.
மது விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மதுபானம் விற்பனை செய்ததாகவும், முறையான உரிமம் இல்லாமல் மது விற்பனை செய்ததாகவும் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விதிகளை மீறிய கடைகள்
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 15 கடைகளில் 13 கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மதுபானம் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
முறையான உரிமம் இல்லாமல் மதுபானம் விற்பனை செய்த இரு கடைகள் சோதனையில் சிக்கின.

அனுமதிக்கப்பட்ட நேரம்
வார நாட்களில்: மது கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள உரிமம் பெற்ற கடைகள் காலை 7 மணி முதல் இரவு 10:30 மணி வரை
வார இறுதி நாட்களில்: காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை
பொது விடுமுறைக்கு முந்தைய நாள் மற்றும் பொது விடுமுறை நாட்களில்: காலை 7 மணி முதல் மாலை 7 மணி
தண்டனை
மதுக் கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மது விற்பனை செய்தால் அதிகபட்சம் S$10,000 அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும், முறையான உரிமம் இல்லாமல் மதுபானம் விற்பனை செய்தால் S$20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டால் S$20,000 அபராதம் அல்லது 3 மாத சிறை, அல்லது இவை இரண்டுமே விதிக்கப்படலாம்.
லிட்டில் இந்தியா உள்ளிட்ட இடங்களில் பிடிபட்ட Jaywalkers.. போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை
லிட்டில் இந்தியாவில் காவல்துறைக்கு கட்டுப்படாமல் விரைந்த கார் விபத்து – 4 பேர் காயம்