லிட்டில் இந்தியாவில் காவல்துறை தடுப்பை மீறி விரைந்து சென்ற கார் மற்றொரு காரின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 33 வயதுமிக்க கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
ரிவர் வேலி சாலையில் நேற்று (நவ.6) இரவு சுமார் 8.35 மணிக்கு 34 வயது ஆடவரை கூர்மையான ஆயுதம் வைத்து தாக்கிவிட்டு அந்த 33 வயது நபர் காரில் தப்பியோடியதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, இன்று (நவ.7) அதிகாலை 12.05 மணியளவில் டெசன்சான் சாலையில் ரோந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் அவரின் வாகனத்தை தடுத்தும் நிறுத்தாமல் அவர் தப்பி சென்றுள்ளார்.
பின்னர் அதிகாரிகள் துரத்த அவரும் காரில் வேகமாக சென்றுள்ளார், இறுதியாக ரேஸ் கோர்ஸ் சாலை மற்றும் பிர்ச் சாலை சந்திப்பில் அவரின் வாகனம் விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த கார் ஓட்டுநர் உட்பட 4 பேர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும், சாங்கி பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக SCDF கூறியது.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
33 வயதுமிக்க கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, காவல்துறை மூச்சி பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் தப்பிச் சென்றது ஆகிய குற்றங்களுக்காக அவர் மீது குற்றம் சாட்டப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்கிறது.
தண்டனை
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டும் குற்றத்திற்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது சேர்த்தும் விதிக்கப்படலாம்.
மூச்சுப் பரிசோதனை மாதிரி கொடுக்கத் தவறினால் S$1,000 முதல் S$5,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
லிட்டில் இந்தியா தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள தொடர்ந்து இணைப்பில் இருங்கள்…