சிங்கப்பூர் TEP Pass: வெளிநாட்டு ஊழியர்களை பாத்திரம் கழுவ, பொட்டலம் போட வைத்து சிக்கிய 6 பேர்

Published: 19 Nov 2026, 6:13 PM |
tep-pass-false-declarations 6 charged

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலை அனுமதி பெற, TEP Pass எனப்படும் பயிற்சி வேலை அனுமதியில் போலியான தகவல்களை அளித்ததாக 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் பயிற்சிக்காக வேண்டி வந்துள்ளதாக குறிப்பிட்டுவிட்டு, அவர்களை உணவகங்களிலும் பிற சேவை துறைகளிலும் பாத்திரம் கழுவ வைப்பது, சுத்தம் செய்ய வைப்பது மற்றும் பொட்டலம் போட வைப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுத்தியதாக மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

இந்நிலையில், போலியான தகவல்களை அளித்ததாக 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

6 பேர் விவரங்கள்

  • குமரன் குணசேகரன் – விஷன் சர்வீசஸ் மற்றும் விஷன் மேன்பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்
  • சாம்சன் முத்துப்பாண்டியன் – விஷன் சர்வீசஸ் இயக்குநர் / விஷன் மேன்பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளர்
  • அரவிந்த் லோக லோகநாதன் – ஷைனி ஸ்பேஸ் சர்வீஸ் நிறுவனத்தின் இயக்குநரும், நற்பவி SG-யில் முக்கியப் பொறுப்பு பெற்றவர்
  • கௌரி ஷங்கர் அய்யாவு – அட்வெல் (Atwell) சர்வீசஸ் மற்றும் SVK SG சர்வீசஸ் ஆகியவற்றின் இயக்குநர்
  • ஹமீது சுல்தான் நிஜாம் மொஹிதீன் – அல் அஹமட் டிலைட்ஸ் எக்ஸ்பிரஸ் இயக்குநர்
  • சிவசுப்பிரமணியன் யுவராஜ் – நற்பவி SG-யின் வேலைவாய்ப்பு முகவர் (Agent)

மேலும், ஊழியர்களுக்கு மாதம் S$3,000 நிர்ணய சம்பளம் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனங்கள் தகவல் அளித்திருந்தன, ஆனால் மாதம் S$1,300 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டதாக மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

TEP விண்ணப்பங்களில் சம்பளம் தொடர்பில் தவறான தகவல்களை அளித்ததாக குமரன் மற்றும் சாம்சன் ஆகிய இருவர் மீதும் தலா 35 குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அதே போல, அரவிந்த் மீது 15 குற்றச்சாட்டும், கௌரி மீது 28 குற்றச்சாட்டும், மொஹிதீன் மீது 29 குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.

தண்டனை

சிங்கப்பூர் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின்கீழ், Work Pass விண்ணப்பங்களில் போலியான தகவல்களை சமர்ப்பித்தால், S$20,000 வரை அபராதம், இரு ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

உண்மையான தகவல்களை மட்டுமே அளிக்க வேண்டும்

வேலைவாய்ப்பு தொடர்பான விண்ணப்பங்களில் முதலாளிகளும், முகவர்களும் உண்மையான மற்றும் முழுமையான தகவல்களை மட்டுமே அளிக்க வேண்டும் என MOM எச்சரித்துள்ளது.

இதுபோன்ற வெளிநாட்டு ஊழியர்களின் விண்ணப்பங்களில் தவறான தகவல்களை அளிப்பது கடும் குற்றமாகும், இது மனிதவள அமைச்சகத்தின் வேலை அனுமதி கட்டமைப்பின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கிறது என்றும் மேலும் ஊழியர்கள் சுரண்டப்படுவதற்கும் இது வழிவகுக்கும் என்றும் MOM கூறியது.

சிங்கப்பூர் E Pass, S Pass: 20 வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தில் போலி தகவல்

சிங்கப்பூரில் 14 ஆண்டுகள் கடின உழைப்பு: சொந்த கிராமத்தில் பிரம்மாண்ட வீடு கட்டிய வெளிநாட்டு ஊழியர்

சிங்கப்பூர் E Pass, S Pass, Work Permit மற்றும் TEP Pass குறித்த செய்திகளை உடனே அறிய இணைந்திருங்கள்…

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.