சிங்கப்பூரில் 1,40,000 வெளிநாட்டு ஊழியர்கள் இணைய ஊடுருவலால் பாதிப்பு!

Published: 16 Nov 2026, 1:57 PM |
work-pass-holder cybersecurity MOM fullerton-health

சிங்கப்பூரில் இணைய ஊடுருவல் குறித்து அண்மையில் செய்தி வெளியிட்டு இருந்தோம், ஒர்க் பாஸ் அனுமதி வைத்திருக்கும் சுமார் 1,40,000 வெளிநாட்டு ஊழியர்களின் தகவல்கள் கசிந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அவற்றில் 43,000 வெளிநாட்டு ஊழியர்களின் அனுமதிகள் காலாவதியானவை என்பதையும் Fullerton Health குழுமம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அவர்களின் மருத்துவ, உடல்நல மற்றும் நிதி தொடர்பான தகவல்கள் ஏதும் கசியவில்லை என்றும் அக்குழுமம் குறிப்பிட்டுள்ளது.

ஆனாலும், ஊழியர்களின் முழு பெயர்கள், FIN அடையாள எண்கள், கைபேசி எண்கள், வீட்டு முகவரிகள் மற்றும் பிறந்தநாள்கள் உள்ளிட்ட தகவல்கள் கசிந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர்களின் நிறுவனம் மூலம் இரு முறை தகவல் அனுப்பட்டுள்ளது, மேலும் FWMOMCare செயலி மூலமும் பாதிக்கப்பவர்களுக்கு அவர்களின் சொந்த மொழிகளையே தகவல் கொடுக்கப்பட்டதாகவம் மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

இதனால் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இணைய ஊடுருவல்

வெளிநாட்டு ஊழியர்களுக்கான முதன்மை பராமரிப்பு திட்டத்தை ஆதரிக்கும் (Migrant Worker Primary Care Plan) Fullerton Health குழுமத்தில் அக்டோபர் 31ஆம் தேதி இணைய வழி சைபர் தாக்குதல் நடந்ததாக நவ.2 அன்று MOM-யிடம் அது தகவல் அளித்தது, பின்னர் நவ.9 அன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இணைய தாக்குதல் குறித்த தகவல் தெரிந்தவுடன் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இணையத்தை வலுப்படுத்தியதாக Fullerton Health குழுமம் கூறியது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பாதிப்பா?

இந்த இணைய ஊடுருவலால் பாதிப்புக்குள்ளான வெளிநாட்டு ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களாகிய நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, முன்பின் தெரியாத நபர்களின் அழைப்புகள், SMS மற்றும் ஈமெயில் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உங்களின் கைபேசி எண்களுக்கு வரும் OTP எண்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

மேலும் வங்கி, ATM போன்ற தனிப்பட்ட விவரங்களை யாருக்கும் பகிர வேண்டாம்.

சாங்கி விமான நிலையத்தில் 2 வெளிநாட்டு ஊழியர்கள் மோதல் – ஒருவருக்கு 11 வாரம் சிறை

Photo: Businesstimes.com.sg website

வெளிநாட்டு ஊழியர்களுக்காக தனித்துவமாக உருவாக்கப்பட்ட Singai Tamil தளத்துடன் இணைந்திருங்கள்!

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.